Skip to main content

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் சிறையில் அடைப்பு!

Published on 14/02/2018 | Edited on 14/02/2018
protest


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணிக்கு எதிராக 2ஆவது நாளாக நேற்று போராட்டம் நடத்தப்பட்ட நிலையில் காவல்துறையினரின் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள், பெண்கள் உள்பட 271 பேரை வலுக்கட்டாயமாகக் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பேராசிரியர் பாத்திமா பாபு உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், மாவட்ட நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர்.

நீதிபதி உத்தரவையடுத்து அவர்கள் 8 பேரும் வரும் 27-ம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையில், சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டவர்கள் வெளியேற மறுப்பு தெரிவித்துள்ளனர்.            

சார்ந்த செய்திகள்