Skip to main content

'மக்கள்தான் பாராட்ட வேண்டும்' - தமிழிசை பேட்டி

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
'People should appreciate'-Tamil interview

சிதம்பரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார். இதில் கோவில் தீட்சிதர்களின் செயலாளர் சிவராம தீட்சிதர் மற்றும் தீட்சிதர்கள் வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். பின்னர் கனகசபை மீது ஏறி அவர் சித்சபையில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானை தரிசனம் செய்தார்.

இதையடுத்து கோவில் வளாகத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து தில்லைக் காளியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசுகையில், ''திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு தரிசனம் செய்து விட்டு நடராஜர் கோயிலுக்கு வந்து அனைவரும் நலமாக இருக்க வேண்டும், மழை வெள்ளத்தில் யாரும் பாதிக்கக்கூடாது என பிரார்த்தித்தேன். நெல்லையில் ஏற்பட்ட கனமழை குறித்து அரசுக்கு சென்னை அனுபவம் உள்ளது. அந்த அனுபவத்தை கொண்டு அரசு எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும். மத்திய குழு பாராட்டிவிட்டது என கூறுகின்றனர். மக்கள் பாராட்ட வேண்டும். அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதே உண்மை. சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்திருக்க வேண்டும்' என்றார்.

சார்ந்த செய்திகள்