Skip to main content

வரும் 27 ஆம் தேதி பொதுமக்களுக்கு இலவச பேருந்து பயணம் - அமைச்சர் சக்கரபாணி 

Published on 22/01/2023 | Edited on 23/01/2023

 

Pazhanimurugan temple festival on 27th public can travel by bus for free

 

ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலின் குடமுழுக்கு வருகிற 27ம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற இருக்கிறது. இந்த குடமுழுக்கை முன்னிட்டு இறுதிக்கட்ட பணிகளும் அசுர வேகத்தில் நடந்து வருகிறது. அதேபோல் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பழனி திருக்கோயிலுக்குச் சென்று குடமுழுக்குப் பணிகளை ஆய்வு செய்தனர்.

 

அதைத் தொடர்ந்து உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் குடமுழுக்கு ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தென் மண்டல ஐ.ஜி, திண்டுக்கல் தேனி மாவட்ட சரக டிஐஜி எஸ்.பி பாஸ்கரன், மாவட்ட ஆட்சியர் விசாகன் உள்ளிட்ட அதிகாரிகள் பெரும்பாலானோர் கலந்துகொண்டனர். அதன்பின் பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “வருகிற 27 ஆம் தேதி நடைபெறும் குடமுழுக்கை முன்னிட்டு பழனி நகர பேருந்துகளில் பொது மக்கள் எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் இலவசமாக பயணம் செய்யலாம். அதுபோல் குடமுழுக்கில் கலந்து கொள்ள குலுக்கல்  முறையில் 2000 பக்தர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதுபோல் குடிநீர், கழிப்பறை போன்ற வசதிகளை பக்தர்களுக்கு செய்து கொடுப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாலியல் புகார்; பாஜக மாவட்ட முன்னாள் செயலாளர் கைது!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
dindigul palani bjp district secretary issue

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருகே சாமிநாதபுரத்தில் இருக்கும் அரசு நடுநிலைப் பள்ளியில் காலை உணவுத்திட்ட ஒருங்கிணைப்பாளராக பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பணியில் இருந்தபோது புஷ்பத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராணியின் கணவரும், திண்டுக்கல் பாஜக மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளரான மகுடீஸ்வரன் காலை உணவுத்திட்ட பணிகளை ஆய்வு செய்வதாக கூறி அங்கு வந்துள்ளார்.

அச்சமயத்தில் மகுடீஸ்வரன் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. அப்போது அந்த பெண் ஒருங்கிணைப்பாளரிடம் எத்தனை குழந்தைகளுக்கு சமைக்கிறாய் என்று கேட்டு இருக்கிறார். அதற்கு அந்த பெண் 35 பேருக்கு என்று சொல்லியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து நான் சமையல் அறையை பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதற்கு அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்து, சமையல் அறைக்கு அழைத்து சென்று இருக்கிறார். அப்போது திடீரென சமையல் ரூமின் கதவை அடைத்த போது அந்த பெண் ஒருங்கிணைப்பாளர் நான் ரூமை திறந்து தான் வைப்பேன் என்று கூறியிருக்கிறார். மது போதையில் இருந்த மகுடீஸ்வரன் அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அதைக்கண்டு பாஜக மாவட்ட செயலாளார் மகுடீஸ்வரன் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். 

இது சம்பந்தமாக காலை உணவுத்திட்ட பெண் ஒருங்கிணைப்பாளர் சாமிநாதபுரம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் மகுடீஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்த விசயம் காட்டுத்தீ போல் பாஜக மாநில பொறுப்பாளர்களுக்கும் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் தெரியவே மகுடீஸ்வரனை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டிருப்பதாகவும், கட்சியினர் யாரும் அவருடன் தொடர்பு கொள்ள வேண்டாமென்றும், மாவட்ட தலைவர் கனகராஜ்  உடனடியாக அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் மங்களூரில் தலைமறைவாக இருந்த மகுடீஸ்வரனை போலீசார் கைது செய்துள்ளனர். பழனி துணை காவல் கண்காணிப்பாளர் தனஞ்செயன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து சாமிநாதபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அதன்பின்னர் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

பெண் ஒருங்கிணைப்பாளருக்கு பா.ஜ.க நிர்வாகி பாலியல் தொல்லை! 

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
BJP executive misbehaved with woman coordinator

அரசு பள்ளியின் காலை உணவுத் திட்ட ஒருங்கிணைப்பாளர் பெண்ணுக்கு  பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில், பாஜக மாவட்ட செயலாளர் மீது  போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்.   

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருகே சாமிநாதபுரத்தில் இருக்கும் அரசு நடுநிலைப் பள்ளியில் காலை உணவுத்திட்ட  ஒருங்கிணைப்பாளராக கலைச்செல்வி பணிபுரிந்து வருகிறார். இவர் பணியில்  இருந்தபோது, புஷ்பத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராணியின் கணவரும், திண்டுக்கல் பாஜக மேற்கு மாவட்ட செயலாளரான மகுடீஸ்வரன் காலை உணவுத்திட்ட பணிகளை ஆய்வு செய்வதாக கூறி வந்துள்ளார். 

அப்போது  மகுடீஸ்வரன் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. அப்போது அந்த பெண் ஒருங்கிணைப்பாளரிடம் எத்தனை குழந்தைகளுக்கு சமைக்கிறாய் என்று கேட்டு  இருக்கிறார். அதற்கு அந்த பெண் 35 பேருக்கு என்று சொல்லியிருக்கிறார். அப்படியிருந்தும் நான் சமையல் அறையை பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதற்கு அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்து, சமையல்  அறைக்கு அழைத்து சென்று இருக்கிறார். அப்போது திடீரென சமையல் ரூமின்  கதவை அடைத்த போது அந்த பெண் ஒருங்கிணைப்பாளர் நான் ரூமை திறந்து  தான் வைப்பேன் என்று கூறியிருக்கிறார். அப்போது மது போதையில் இருந்த  மகுடீஸ்வரன் அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக  தெரிகிறது. இதில் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் “ஒருங்கிணைப்பாளர் என்னை  காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்” என சத்தம் போட்டு இருக்கிறார். இதனைக்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அதைக்கண்டு பாஜக  மாவட்ட செயலாளார் மகுடீஸ்வரன் அங்கிருந்து தப்பி ஓடி  தலைமறைவாகிவிட்டார். 

இது சம்பந்தமாக ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வி  சாமிநாதபுரம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் பாலியல்  வன்கொடுமை உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் மகுடீஸ்வரன் மீது வழக்குப்பதிவு  செய்து தேடி வருகின்றனர். இந்த பாலியல் தொந்தரவு கொடுத்த மகுடீஸ்வரன்  தமிழக பாஜ மாநிலத்தலைவருடன் நெருங்கிய நண்பராகவும் இருந்து வந்திருக்கிறார். அதன் அடிப்படையில் தான் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராகவும் இந்த மகுடீஸ்வரனை நிறுத்த தமிழக பாஜக தலைவர் முடிவும் செய்தும் இருந்தார். அதற்கு மாவட்ட பாஜக  பொறுப்பாளர்களும் ஆதரவு தெரிவித்தும் இருந்தனர். ஆனால் திடீரென  இத்தொகுதியை பிஜேபி கூட்டணியில் உள்ள பா.ம.கவிற்கு ஒதுக்கியதால் மகுடீஸ்வரன் வேட்பாளராக நிற்க முடியாமல் போய்விட்டது. இல்லையென்றால்  இந்த பாலியல் தொந்தரவு கொடுத்த மகுடீஸ்வரன் தான் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டும் இருப்பார். 

இந்த விசயம் காட்டுத்தீ போல் பாஜக மாநில பொறுப்பாளர்களுக்கும்  மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் தெரியவே மகுடீஸ்வரனை கட்சியின்  அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டிருப்பதாகவும், கட்சியினர் யாரும்  அவரும் தொடர்பு கொள்ள வேண்டாமென்றும், மாவட்ட தலைவர் கனகராஜ்  உடனடியாக அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.