Skip to main content

மீண்டும் கட்டண விவகாரம்..! போராட்டத்தில் கல்லூரி மாணவர்கள்..!

Published on 13/02/2021 | Edited on 13/02/2021

 

Payment issue again College students in struggle
                                                        மாதிரி படம் 


கரோனா காலகட்டத்தில் அரசு கலைக் கல்லூரிகளில் சரியான முறையில் செமஸ்டர் தேர்வு நடைபெறவில்லை. அதற்கு முன்பு எடுத்த மதிப்பெண்களை மையமாக வைத்து தேர்ச்சி என்று பல்கலைகழகங்கள் அறிவித்திருந்தன. இதுகுறித்து கல்வியாளர்களிடம் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தது. வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கலாகின. இதனால் ஆல் பாஸ் என்பது நிறுத்தப்பட்டது. தேர்வு எழுத வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.

 

வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளின் தலைமை அமைப்பான வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் மறு தேர்விற்கு புதிய கட்டணம் செலுத்த வேண்டும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாணவ, மாணவிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

 

‘தேர்வு வைக்கட்டும், வேண்டாம் எனச் சொல்லவில்லை. ஆனால் தேர்வே நடத்தாமல் ஆல் பாஸ் என்றார்கள். அப்போது நாங்கள் கட்டிய தேர்வு கட்டணம் என்னவானது? இப்போது தேர்வு அறிவிக்கிறார்கள். இதற்கும் தேர்வு கட்டணம் கட்டச்சொல்வது எதற்காக? முன்பு நாங்கள் கட்டிய தேர்வு கட்டணம் என்னவானது?’ போன்ற கேள்விகள் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே எழுந்துள்ளது. இதற்கு கல்லூரி நிர்வாகங்கள், பல்கலைக்கழக நிர்வாகங்கள் பதிலளிக்கவில்லை.

 

இதனைக் கண்டித்து திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள், பிப்ரவரி 13ஆம் தேதி காலை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்கம் உட்பட சில மாணவ அமைப்புகள் முன்னெடுத்த போராட்டத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கலைஞரின் திரைப் படைப்புகள் பற்றிய ஆய்வுக்கான வாய்மொழித் தேர்வு (படங்கள்)

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் ஆற்றிய 'தமிழ்த் திரைப் பணி - ஓர் ஆய்வு' என்ற தலைப்பில் சென்னைப் பல்கலைக்கழகம் வழங்கும் வாய்மொழித் தேர்வு நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் நடைபெற்றது. தமிழ்த் துறையின் பேராசிரியர் இரா. கருணாநிதியை நெறியாளராக கொண்டு கலைஞர் கதை, வசனம் எழுதிய கலைஞரின் பெண் சிங்கம் திரைப்பட இயக்குநர் ஸ்ரீ கபாலி என்கிற பாலி ஸ்ரீரங்கம்  ஆய்வு மாணவராக,  கலைஞர் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் எழுதிய 75 படங்களை முனைவர் பட்ட ஆய்வு செய்துள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் 2015 ஆம் ஆண்டிலிருந்து கலைஞரின் திரைப்படைப்புக்களை ஆய்வு செய்து வந்தார். தற்போது கலைஞரின் திரைப் பணி ஆய்வு நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

Published on 02/08/2022 | Edited on 02/08/2022

 

Admission date notification for arts and science colleges!

 

கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதியைக் கல்லூரி கல்வி  இயக்ககம் அறிவித்துள்ளது.

 

தமிழகத்தில் வரும் கல்வியாண்டிற்கான கலை, அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 5 தேதி முதல் தொடங்கும் எனக் கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் வரும் ஆகஸ்ட் 5 முதல் கலந்தாய்வு தொடங்க உள்ளது. 12 ஆம் வகுப்பில் எடுக்கப்பட்ட மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும். 163 கலை, அரசு அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1.3 லட்சம் இடங்களில் சேர 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில் ,சில நாட்களுக்கு முன்பு தரவரிசை பட்டியல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது. அதிலும் இந்த கலந்தாய்வு ஆன்லைன் முறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.