/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nalinui43434.jpg)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான நளினிக்கு ஒன்பதாவது முறையாக பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தாயார் பத்மாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரைக் கவனித்துக் கொள்ள பரோல் வழங்க நளினி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்ததை அடுத்து, கடந்த டிசம்பர் மாதம் முதல் அவர் பரோலில் உள்ளார். மேலும், உடல்நலம் பாதித்த தம்மைக் கவனிக்க நளினிக்கு பரோலை நீட்டிக்க வேண்டும் என்று அவரது தாயார் தமிழக அரசு மனு அளித்திருந்தார்.
இதனையேற்ற தமிழக அரசு, நளினிக்கு மேலும் 30 நாட்கள் பரோலை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. நளினி தனது தாயார் பத்மாவுடன் காட்பாடியை அடுத்த பிரமபுரத்தில் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)