Skip to main content

குரூப்-1 தேர்வில் இடம்பெற்ற 'பரியேறும் பெருமாள்'-'இனி அது மானுடத்தின் பிரதி'- மாரிசெல்வராஜ் நெகிழ்ச்சி!!   

Published on 03/01/2021 | Edited on 03/01/2021
mariselvaraj

 

இன்று (3/1/2021) நடைபெற்ற குரூப்-1 தேர்வு வினாத்தாளில் இடம்பெற்ற கேள்வி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 

கடந்த 2018-ஆம் ஆண்டு வருடம் திரைக்கு வந்து அனைத்து தரப்பினாராலும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்ற திரைப்படம் 'பரியேறும் பெருமாள்'. இத்திரைப்படத்தினை அறிமுக இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கியிருந்தார். 'நீலம்' தயாரிப்பு குழுமம் சார்பில் இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்திருந்த இந்த படத்தில் 'பரியன்' என்ற கதாபாத்திரத்தில் கதிர் நடித்திருந்தார். கதாநாயகியாக ஆனந்தியும், அதேபோல் கதிரின் நண்பராக யோகிபாபுவும் நடித்திருந்தனர். 

 

இன்று (3/1/2021) நடைபெற்ற குரூப்-1 தேர்வு வினாத்தாளில், 'தலை சிறந்த படைப்பான ''பரியேறும் பெருமாள்'' என்ற தமிழ் திரைப்படம் பற்றிய விமர்சனம் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்யவும்' என்ற கேள்வி இடம்பெற்றிருந்தது. இதுகுறித்து தனது கருத்தைப் பகிர்ந்துள்ள திரைப்படத்தின் இயக்குனர் மாரிசெல்வராஜ், ''பரியேறும் பெருமாள் என்கின்ற படைப்பின் நோக்கம் முழுமையடைந்தது. இனி அது மானுட சமூகத்தின் பிரதி; யாவருக்கும் நன்றி'' என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"பழசெல்லாம் தூக்கி வீச கேட்குதா என் பாச" - ‘மாமன்னன்’ லிரிக் வீடியோ

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

Manna Maamanna Lyric video

 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமன்னன்'. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க வடிவேலு, ஃபகத் பாசில், ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகியுள்ளன. இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாக நடந்தது. உதயநிதி நடிப்பில் கடைசி படமாக இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

இப்படத்தின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. பாடலாசிரியரும், தமிழ் ராப் பாடகருமான தெருக்குரல் அறிவு பாடியிருக்கிறார். “கேக்குதா என் பாச... எனக்குள்ளே ஒரு ஓச” எனத் தொடங்கும் இப்பாடலை அவரே எழுதியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை வெளி வந்த படத்தின் அனைத்து பாடல்களின் லிரிக்கல் வீடியோவுமே வண்ணத்தில் இல்லாமல் கருப்பு வெள்ளையிலேயே வெளியாகியிருக்கிறது. இதன் மூலம் இயக்குநர் என்ன சொல்ல வருகிறார் என்பதும் படம் வெளியான பிறகே தெரிய வரும் என ரசிகர்கள் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

 


 

Next Story

மாமன்னன் பாடல்கள் பட்டியல் வெளியீடு

Published on 01/06/2023 | Edited on 01/06/2023

 

 MAAMANNAN track list

 

‘பரியேறும் பெருமாள்’, 'கர்ணன்' ஆகிய வெற்றி படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது 'மாமன்னன்' படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

 

இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படம் பற்றி பேசிய மாரி செல்வராஜ், "தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படமாக மாமன்னன் இருக்கும். இன்றைய சூழலில் இருக்கும் அரசியலை பேசக்கூடிய படமாக இருக்கும்" எனப் பேசினார். 

 

உதயநிதி நடிப்பில் கடைசி படமாக இப்படம் வெளியாவதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடலான 'ராசா கண்ணு' பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்தது. 

 

இப்படத்தின் இசை வெளியீடு இன்று மாலை 6 மணி முதல் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கலந்து கொள்கிறார். இசை நிகழ்ச்சிக்கான வேலைகள் நடைபெற்றதை படக்குழு மேக்கிங் வீடியோவாக வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் என பட்டியல் வெளியிட்டு இருக்கிறார்கள்.