Skip to main content

நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா உடல்நலகுறைவால் மருத்துவமனையில் அனுமதி

Published on 01/11/2019 | Edited on 02/11/2019
ss

 

பிரபல நாட்டுப்புற பாடகரும், சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து பிரபலமானவருமான பரவை முனியம்மா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அவருக்கு மூச்சு திணறல் அதிகரித்ததன்  காரணமாக தற்போது வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது. தூள் திரைப்படத்தில் ''சிங்கம் போல'' என்ற பாடலின் மூலம் பிரபலமானவர் என்றாலும் அவர் அதற்கு முன்பே பல்வேறு நாட்டுப்புற பாடல்கள் பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அவருடைய மருத்துவமனை செலவு அனைத்தையும் மதுரை வேலம்மாள் மருத்துவமனையே ஏற்று சிகிச்சை அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ம.தி.மு.க. எம்.பி. கணேசமூர்த்தி காலமானார்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
mdmk MP Ganesamurthy passed away

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாகத் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்கு பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். என்ன காரணம் எனத் தெரியாத சூழலில் இதுகுறித்து விசாரித்தபோது அன்று காலை தனது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் கணேசமூர்த்தி. சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது 10.30 மணிக்கு தெரியவந்தது. ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கணேசமூர்த்தியின் உயிரிழப்பு காரணமாக மதிமுக கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மருத்துவமனைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

Next Story

நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்

Published on 24/12/2023 | Edited on 24/12/2023
Comedian Bonda Mani passed away


சென்னையில் உள்ள வீட்டில் திடீரென மயங்கி விழுந்த நடிகர் போண்டாமணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானார்.

'பவுனு பவுனுதான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகர் போண்டாமணி அதனைத் தொடர்ந்து வடிவேலு, கவுண்டமணி உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்களின் கூட்டணியில் பல்வேறு காட்சிகளில் கலக்கியிருந்தார். குசேலன், சச்சின், வேலாயுதம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் போண்டா மணி.

இந்நிலையில் அண்மையில் சிறுநீரக கோளாறு ஏற்பட்டு சிகிச்சை மேற்கொண்ட போண்டா மணி வீட்டில் ஓய்வுபெற்று வந்த நிலையில் இன்று திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொழுது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நடிகர் போண்டாமணியின் மறைவு ரசிகர்கள் மத்தியிலும் தமிழ் திரையுலகினர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.