Skip to main content

பரமக்குடி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு; சிபிசிஐடிக்கு மாற்றம்  

Published on 10/03/2023 | Edited on 10/03/2023

 

paramakudi school girl incident case transfer to cbcid police

 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் 9 ஆம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறி பரமக்குடி மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் பள்ளி மாணவியிடம் நடத்திய ரகசிய விசாரணையில் பள்ளி படிப்புக்கு உதவி செய்வதாக கூறி சிலர் பாலியல் வன்கொடுமை செய்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

 

இதனைத் தொடர்ந்து மேலும் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், பரமக்குடி 3 வது வார்டு கவுன்சிலரும், பரமக்குடி அதிமுக நகர அவை தலைவருமான சிகாமணி, ஜவுளி நிறுவன உரிமையாளர் ராஜா முகமது, மறைத் தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகர் ஆகியோர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய உமா மற்றும் கயல்விழி ஆகியோரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் படிப்புக்கு உதவி செய்வதாக கூறி ஏழை சிறுமிகளிடம் அத்துமீறியது தெரியவந்துள்ளது. மேலும் இதில் முன்னாள் அமைச்சர் ஒருவரின் உறவினரும் சம்பந்தப்பட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபுவின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

 

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பான வழக்கு ஆவணங்களை பரமக்குடி மகளிர் காவல் நிலைய போலீசார் சிபிசிஐடியிடம் ஒப்படைத்தனர். தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரிக்க தொடங்கி உள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.

Next Story

ஆறு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியருக்கு 47 ஆண்டுகள் சிறை

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Headmaster gets 47 years in jail

சிவகங்கையில் பள்ளி சிறுமிகள் ஆறு பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ளது பெரிய நரிக்கோட்டை கிராமம். இங்கு செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காளையார் கோவில் அண்ணா நகர்ப் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு அதே பள்ளியில் பயின்ற ஆறு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டி ஒருவர் இது தொடர்பாக சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகார் அடிப்படையில் தலைமை ஆசிரியரை விசாரித்த பொழுது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கினை நடத்தி வந்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் பல கட்டங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சரத்ராஜ் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். தீர்ப்பில் ஆறு குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

இந்த குற்றத்திற்கு அபராதத் தொகையாக 69 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட ஆறு சிறுமிகளுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் 29 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.