Skip to main content

ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது!

Published on 24/09/2020 | Edited on 24/09/2020

 

Panchayat secretary arrested for taking Rs 20,000 bribe

 

கடலூர் மாவட்டம் வட்டத்தூர் ஊராட்சி செயலாளர் பழனிச்சாமி, ரூ20 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சேத்தியா தோப்பு அருகே வட்டத்தூர் ஊராட்சி தலைவராக இருப்பவர் அமராவதி. இந்த ஊராட்சியின் செயலாளராக இருப்பவர் பழனிச்சாமி(40). இந்த ஊராட்சியில் தற்காலிக டேங்க் ஆபரேட்டராக பணிபுரிந்து வருபவர் மணிகண்டன் (21). இவருக்கு நிரந்தரப் பணி ஆணை வழங்கவும், சம்பள உயர்வு, நிலுவை தொகை போன்றவை வழங்கவும் ஊராட்சி செயலாளர் பழனிச்சாமி ஆபரேட்டர் மணிகண்டனிடம் ரூ.1 லட்சம் கேட்டுள்ளார்.


இது குறித்து  கடந்த 21ஆம் தேதி மணிகண்டன், கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸார், அவரிடம் ரசாயனம் தடவிய ரூ.20 ஆயிரம் பணத்தை அளித்து, அதை ஊராட்சி செயலாளர் பழனிச்சாமியிடம் தருமாறு கூறியுள்ளனர்.

 

Ad

 

இந்த நிலையில் நேற்று, டேங் ஆபரேட்டர் மணிகண்டனின் தம்பி மகேஷ்(19) ஊராட்சி செயலாளர் பழனிச்சாமி வீட்டுக்குச் சென்று முதல் தவணை என்று கூறி ரசாயனம் தடவிய ரூ.20 ஆயிரத்தைக் கொடுத்துள்ளார். அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீஸார் பழனிச்சாமியை கைது செய்தனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவசாயியைத் தாக்கிய ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்!

Published on 02/10/2023 | Edited on 02/10/2023

 

The panchayat secretary was suspended for farmer incident

 

காந்தி ஜெயந்தியையொட்டி தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளிலும் இன்று (02.10.2023) காலை கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள கங்காகுளம் என்ற கிராம ஊராட்சியிலும் இன்று கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சியைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் என பலரும் கலந்துகொண்டனர்.

 

இந்த கூட்டத்தின் போது விவசாயி ஒருவர் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அப்போது அங்கு இருந்த கங்காகுளம் ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியன் கேள்வி எழுப்பிய விவசாயியை எட்டி உதைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று மக்கள் மத்தியில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியன் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

அதே சமயம் கிராம சபை கூட்டத்தில் கேள்வி எழுப்பிய விவசாயியைத் தாக்கிய ஊராட்சி செயலாளர் தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவின் பேரில் கங்காகுளம் ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியனை சஸ்பெண்ட் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். 

 

 

Next Story

‘ஊராட்சி மணி’ குறை தீர்க்கும் மையம் தொடக்கம்!

Published on 27/09/2023 | Edited on 27/09/2023

 

panchayat bell grievance redressal center started

 

ஊரகப் பகுதிகளில் ஏற்படும் குறைகளைக் களையும் பொருட்டு ‘ஊராட்சி மணி’ என்ற அமைப்பு ஊரக வளர்ச்சி ஊராட்சித் துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், பொது மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க ஊராட்சிகளைத் தொடர்பு கொள்ளும் வகையில் ஒரு இலவச குறை தீர்வு அழைப்பு எண் 155340 பிரத்யேகமாக மாநில அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

இதன் மூலம் பொதுமக்கள் மிக எளிமையாக 155340 என்ற தொலைப்பேசி வாயிலாகவும்,  Ooratchimani.in என்ற வலைத்தளம் மூலம் எளிதாக அணுக முடியும். மேலும் பெறப்படும் புகார்களின் தன்மைக்கேற்ப அலுவலக ரீதியிலான கால தாமதம் தவிர்க்கப்பட்டு குறிப்பிட்ட காலவரையறைக்குள் அப்புகார் மீது எளிய முறையில் உடனடித் தீர்வு காணப்படும். அதே சமயம் ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் ஆகியோருக்கு ஏற்படும் குறைகளையும், சந்தேகங்களையும் இந்த ஊராட்சி மணி மூலம் அணுகி பதில் பெறும் வகையில் இச்சேவையை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி இன்று (27.09.2023) காலை 11.00 மணி அளவில் தொடங்கி வைத்தார்.

 

இந்நிகழ்ச்சியின் போது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை முதன்மைச் செயலாளர், முனைவர் ப. செந்தில்குமார், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் பா. பொன்னையா, கூடுதல் இயக்குநர் (பொது), திரு. எம்.எஸ். பிரசாந்த்  மற்றும் இதர அலுவலர்கள் பலரும் பங்கேற்றனர்.