Panchayat leader's car attacked ... Excitement in Kurinjipadi!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம் கீழ்பவானி குப்பத்தை சேர்ந்தவர் அருள் ஜோதி (45) ஊராட்சி மன்ற தலைவரானஇவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி உழவர் இயக்க மாநில துணை செயலாளராகஉள்ளார். இவர் தனது இன்னோவா காரில் குடும்பத்துடன் கடலூர் சென்று திரும்பும்போது கடலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டத்திற்கு சென்று திரும்பிய அக்கட்சியினர் அருள்ஜோதி காரைஉடைத்து சேதப்படுத்தினர். தகவலறிந்த கீழ்பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் சுமார் 100 பேர் கடலூர் சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் இரவு 7 மணி முதல் 7.45 மணி வரை சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment