Palladam sad incident; information to Sayalkudi; Arrest someone?

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சேமலை கவுண்டம்பாளையத்தில் என்ற கிராமத்தில் தெய்வசிகாமணி (வயது 76) என்பவரும், அவரது மனைவி அமலாத்தாள் (வயது 70) மற்றும் மகன் செந்தில்குமார் (வயது 46) ஆகியோர் பண்ணை வீட்டில் வசித்து வந்தனர். இத்தகைய சூழலில் தான் தோட்டத்திற்கு வந்த மர்ம நபர்கள் முதலில் தெய்வசிகாமணியை வெட்டியதாகக் கூறப்படுகிறது. அப்போது அவரை காப்பாற்ற முயன்ற அமலாத்தாள் மற்றும் செந்தில்குமார் ஆகியோரையும் மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து இன்று (29.11.2024) காலை அவர் வீட்டுக்கு வந்த சவரத் தொழிலாளி ஒருவர், வீட்டில் இருந்த 3 பேரும் வெட்டி கொலை செய்யப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

Advertisment

இது குறித்து அவிநாசிபாளையம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதோடு பல்லடம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் தடயவியல் நிபுணர்கள் மோப்பநாய் உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். நகை பணத்திற்காக இந்த கொலை நடந்ததாஅல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக இந்த கொலை நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை, தாய் மற்றும் மகன் என மூன்று பேரும் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 7தனிப்படைகள் அமைத்துதீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட தெய்வசிகாமணியின் தோட்டத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம்சாயல்குடியை பகுதியைச் சேர்ந்த கணவன்-மனைவி இருவர் தங்கி வேலை பார்த்து வந்தது தெரிய வந்துள்ளது. அதில் ஆணின் நடவடிக்கையில் அதிருப்தியடைந்ததை தெய்வசிகாமணி சண்டையிட்டு அவரை அங்கிருந்து அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

கடந்த 10 நாட்களாக அந்த நபர் தெய்வசிகாமணி தோட்டத்தை நோட்டமிட்டு வந்ததாக தெரிகிறது. ஊரிலிருந்து சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் தோட்டம் உள்ள நிலையில் தோட்டத்தை இருசக்கர வாகனத்தில் அந்த நபர் சுற்றி வந்துள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீசாரிடம் தெய்வசிகாமணியின் உறவினர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் பல்லடம் போலீசார் கொடுத்த தகவலின் அடிப்படையில் சாயல்குடி போலீசார் சந்தேகத்திற்குரிய அந்தநபரை பிடித்து காவல்நிலையத்தில் வைத்து விசாரித்து வருவதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment