Skip to main content

'ஊழல் பெருச்சாளிகளின் அட்டகாசங்கள்'- மு.க.ஸ்டாலின்!

Published on 20/10/2020 | Edited on 20/10/2020

 

paddy purchase farmers dmk mk stalin tweet

 

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "அரசு கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகள் நனைந்து, முளைக்கும் அவலம்... விளைந்தும் விவசாயிகளுக்கு விலையில்லை; ஊழல் பெருச்சாளிகளின் அட்டகாசங்கள் ஓயவில்லை. 'காவிரி காப்பாளர்' பட்டம் மட்டும் போதுமா? பயிர்தான் விவசாயிகளின் உயிர் என்பது முதல்வருக்குத் தெரியாதா? உடனடி நடவடிக்கை தேவை!" என்று வலியுறுத்தியிருந்தார்.

 

தொடர் மழையால் நெல் நனைந்தது தொடர்பான செய்தியை மேற்கோள்காட்டி ட்விட்டர் பக்கத்தில் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

 

இதனிடையே, சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் காமராஜ் நெல் கொள்முதல் தொடர்பாக விளக்கமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஷங்கர் வீட்டு நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
shankar daughter aishwarya marriage cm mk stalin wished

முன்னணி இயக்குநராக வலம் வரும் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி என 2 மகள்கள் உள்ளனர். இளைய மகள் அதிதி ஷங்கர், தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மூத்த மகள் ஐஸ்வர்யா, பணியாற்றி வருவதாக கூறப்படும் நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு தொழிலதிபர் மற்றும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்தை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது. முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட சில முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து ரோஹித் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ரோகித்தை ஐஸ்வர்யா விவாகரத்து செய்தார். பின்பு ஷங்கர் வீட்டிலே வசித்து வந்த அவர், கடந்த பிப்ரவரி மாதம் தருண் கார்த்திகேயன் என்பவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து திருமண விழாவிற்கு முதல்வர் ஸ்டாலின், மற்றும் திரைப்பிரபலங்கள் பலருக்கும் ஷங்கர் அழைப்பிதழ் வழங்கினார்.  

இந்த நிலையில் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.