சிதம்பரம் சின்ன கடைத் தெருவில் வசிக்கும் மாணிக்கம்(70 ) என்பவர் அதே தெருவில் இனிப்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் இன்று மதியம் கடைக்கு தேவையான பலகாரங்களை எண்ணெய் சட்டியில் செய்து கொண்டிருந்தார். அப்போது, எண்ணெய் நல்ல கொதித்து இருந்த நிலையில் இவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது.
அப்போது மயங்கி எண்ணெய் சட்டியில் விழுந்துள்ளார். இதனால் இவரது முகம் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் கூச்சல் போட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.