Skip to main content

தமிழகம் ஒருபோதும் இந்தியை அனுமதிக்காது; சொல்கிறார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்...

Published on 17/09/2019 | Edited on 17/09/2019

"தமிழகத்தில் இந்தி திணிப்பு எப்போதும் சாத்தியமில்லை, அதை ஒருபோதும் அதிமுக ஏற்காது," என்கிறார் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ,எஸ்,மணியன்.

 

o.s.manian about hindi imposition

 

 

நாகப்பட்டினம் பேருந்துநிலையம் அருகே உள்ள அவுரித்திடலில் பேரறிஞர் அண்ணாவின் 111 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அதிமுக சார்பில் நடத்தப்பட்டது. கூட்டத்தில் பேசிய அமைச்சர் மணியன், " தமிழகம் தற்போது வளர்ச்சி பாதைக்கு சென்று கொண்டிருக்கிறது. தொழில் வளர்ச்சியில் சட்டம்-ஒழுங்கு நிர்வாகத்தில் முதன்மையான மாநிலமாக திகழ்கிறது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்காலத்தில் கடுமையாக மின்வெட்டு இருந்தது. மின்கம்பிகளில் தொட்டில் கட்டும் நிலை கூட நீடித்தது. தற்போது தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறிவிட்டது. தற்போது திமுக தடுமாற்றத்தில் இருக்கிறது. அதிமுகவில் இருந்து சென்றவர்கள் தான் திமுகவை தற்பொழுது வழி நடத்துகிறார்கள். இனிவரும் காலங்களில் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கவே முடியாது.

சென்னை ஆர்,கே நகரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு கிடைத்த வெற்றி என்பது அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி தானே தவிர, அக்கட்சியின் தலைவருக்கோ அல்லது அந்த கட்சிக்கு கிடைத்த வெற்றி இல்லை. மத்திய அரசு தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சிக்கிறது எனவும் அதை முதல்வர் வேடிக்கை பார்க்கிறார் எனவும் பேசப்பட்டு வருகிறது. இதையே திமுக தலைவர் ஸ்டாலின் அரசியலாக செய்கிறார். பெரியார் காட்டிய வழியில் அண்ணா ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வெற்றி கண்டார். அந்த அண்ணாவின் பெயரில் ஆட்சி செய்யும் அதிமுக ஒருபோதும் இந்தியை திணிக்காது. இந்தியை ஏற்காது. எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் வகுத்துத்தந்த பாதையில் ஆட்சி நடைபெறும் தமிழகத்தில் இந்தி திணிப்பு சாத்தியமே இல்லை." என்றார்.

கூடியிருந்தவர்களோ, " இந்தியை எதிர்க்கிறோம்னு சொல்லுறாங்க, ஆனா அந்த கட்சியில் உள்ள அமைச்சர்கள் சிலரோ அண்ணாவோட படத்தையே எடுக்கனும் என்கிறார்கள், சிலர் அண்ணாவையோ, எம்,ஜி,ஆரையோ படமாக போடுவதில்லை, இதுல எது உண்மைன்னு புரியலையே," என முனுமுனுத்தபடி வீட்டிற்கு சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்