train

கரோனா வைரஸ் தொடர்பாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வெளி மாநிலத் தொழிலாளர்கள் வேலையிழந்து, வருமானம் இல்லாமல் தவித்தனர். ரயில், பேருந்து, விமானப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டதால் தங்களது சொந்த மாநிலங்களுக்குப் போக முடியாமலும், தங்குமிடம் உணவு போன்றவைக்குகடும் சிரமப்பட்டனர். தமிழகத்தில் சில இடங்களில் தங்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்குமாறு சிலர் போட்டத்திலும் ஈடுபட்டனர்.

Advertisment

கோவை சிங்காநல்லூர் அடுத்த எல்.ஜி. இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் பகுதியில் கனரக வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இந்நிறுவனத்தில் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த அசோக் பெக்ரா (32) என்பவர் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார்.

Advertisment

இவருக்கு ஒரிசா மாநிலத்தில் மனைவி மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர்.இந்நிலையில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் தொழிற்சாலை மூடப்பட்டது.இதனால் வேலை இல்லாமல் தொழிற்சாலையிலேயே கடந்த இரண்டு மாதங்களாக அசோக் பெக்ரா தனியாகத் தங்கி இருந்துள்ளார்.அசோக் பெக்ரா சொந்த ஊருக்குச் செல்ல பல முறை முயற்சித்துத் தோற்று விட்டார்.

இந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து அசோக் பெக்ரா உடன் ஒரு பணியாளர் என இரண்டு பேர் மட்டுமே இத்தொழிற்சாலையில் பணியில் இருந்து வந்ததாகத் தெரிகிறது.ஆனால் இன்று காலை சக பணியாளர் தொழிற்சாலையைத் திறந்தபோது அசோக் பெக்ரா கிரைன் இயந்திரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Advertisment

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சிங்காநல்லூர் காவல்துறையினர் அசோக் பெக்ராவின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

http://onelink.to/nknapp

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அசோக் பெக்ரா தனது சொந்த ஊருக்குச் செல்ல முடியாத நிலையில் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.