Skip to main content

மூடப்பட்டுள்ள கோவில் ஊழியர்களுக்கு ரூ.1000 வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது! – இந்து சமய அறநிலையத்துறை தகவல்!

Published on 07/08/2020 | Edited on 07/08/2020
An order has been issued to pay Rs.1000 to the closed temple staff!

 

 

கிராமப் புறங்களில் உள்ள சிறு கோவில்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், மூடப்பட்டுள்ள கோவில்களில் பணியாற்றும் 6,664 ஊழியர்களுக்கு தலா 1000 ரூபாய் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கினால் கோவில்கள் மூடப்பட்டுள்ளன. கோவில்களை நம்பி வாழும் அர்ச்சகர்கள், பட்டாச்சார்யர்கள், பூசாரிகள், ஓதுவார்கள், அத்யாபகர்கள், வேதபாராயணிகள் உள்ளிட்டோருக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க, இந்துசமய அறநிலையத்துறைக்கு உத்தரவிடக் கோரி தினமலர் திருச்சி -வேலூர் பதிப்பு வெளியீட்டாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி,  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் கவுசிக் ஆஜராகி வாதாடினார்.

 

இந்த வழக்கு  நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது இந்து அறநிலையத்துறை சார்பில்,  ஆஜரான வழக்கறிஞர் கார்த்திகேயன், ஊரடங்கின் காரணமாக மூடப்பட்டிருந்த கோவில்களைச் சேர்ந்த 12,041 ஊழியர்களுக்கு மார்ச் 15 முதல் மே மாதம் 15 வரையிலான இரண்டு மாத காலங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.  அதுபோல, மே 16 முதல் ஜூன் 30 வரையிலான காலக்கட்டத்திற்கு தலா 1,500 ரூபாய் வழங்க,  தற்போது அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜூலை மாதம் 1-ம் தேதி முதல், கிராமப்புறங்களில் உள்ள சிறு கோவில்களைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், மூடப்பட்டுள்ள கோவில்களில் பணியாற்றி வரும் 6,664 ஊழியர்களுக்கு,  ஜூலை மாத நிவாரணமாக தலா 1,000 ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறினார்.

 

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அறநிலையத் துறை ஆணையரின் உத்தரவைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை  வரும் ஆகஸ்ட் 13-ம்  தேதிக்கு தள்ளிவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பானை சின்னம் வேண்டும்' - நீதிமன்றத்தை நாடிய வி.சி.க.

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 'We want a pot symbol'-vck moves the court

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. பம்பரம் சின்னம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதோடு, பம்பரம் சின்னம் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆனால் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற முடிவில் மதிமுக தரப்பு உள்ளது.

இந்நிலையில், அதே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக பானை சின்னம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியுள்ளது. திமுக கூட்டணியில் இரண்டு தொகுதியில் விசிக போட்டியிடும் நிலையில் பானை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது விசிக.

Next Story

திரௌபதி அம்மன் கோவில் இன்று திறப்பு; போலீசார் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Draupadi Amman temple opens today; Police build up

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. கோவிலில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது.

இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு கால பூஜை மற்றும் பூசாரியால் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது கட்டிங் மெஷின் மூலம் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.