Skip to main content

“30 ஆண்டுகளாக ஆட்சி செய்த ஒரே கட்சி அதிமுகதான்” - ஓ.பி.எஸ்

Published on 29/08/2022 | Edited on 29/08/2022

 

ops said AIADMK only party that has ruled for 30 years

 

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுகவினர் ஓ.பி.எஸ் முன்னிலையில் இணைந்தனர்.

 

தேனி மாவட்டத்தில் உள்ள , பெரியகுளம் அருகே இருக்கும் கைலாசபட்டி ஓ.பி.எஸ் பண்ணை வீட்டில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வேடசந்தூர் அதிமுக ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில், 500க்கும் மேற்பட்டோர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில்  சந்தித்து  சால்வை அணிவித்து  இணைந்தனர்.இதில் ஆத்தூர்  தொகுதியில் இருக்கும் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செயலாளர் பசும்பொன், பழனி  முன்னாள்  சட்டமன்ற உறுப்பினர் சுப்புரத்தினம், நிலக்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள்  உடன் இருந்தனர்

           

இதில் முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் பேசும் போது, “முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை தொடர்ந்து கடந்த நான்கு ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்ததோடு, அதிமுக 30 ஆண்டுகளாக ஆட்சி செய்த உரிமை பெற்றிருக்கிறது. அதேபோல் நாடு சுதந்திரம் அடைந்த  பிறகு 30 ஆண்டு ஆட்சி செய்த ஒரே கட்சி அதிமுகதான்,அந்த அளவுக்கு வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறோம். அதற்கு எம்.ஜி.ஆர் அவர்களும், ஜெயலலிதாவும் தான் காரணம். ஜெயலலிதா பொறுப்பேற்ற போது 15 லட்சமாக இருந்த தொண்டர்களின் இயக்கத்தை , கடந்த 30 ஆண்டுகளாக பொதுச் செயலாளராக இருந்து கொண்டு அத்தனை வேதனை சோதனைகளையும், எதிர்க்கட்சிகளில் அரசியல் சூழ்ச்சிகளையும், முறியடித்து இன்றைக்கு ஒன்றைக் கோடி தொண்டர்களின் இயக்கமாக அதிமுக இருக்கிறது. அதிமுகவினரை பொறுத்தவரை எந்த ஒரு வம்பு தும்புக்கும் போக மாட்டார்கள். அது போல் ஆட்சியில் இருந்தால் கூட அதிகாரமும் அதிகார துஷ்பிரயோகம் செய்ய மாட்டார்கள். அதனால் தான் கட்சி இந்த அளவுக்கு வளர்ந்து இருக்கிறது” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.

Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 04  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.

Next Story

தேர்தலை சீர்குலைக்க விஷமிகள் பொய் பிரச்சாரம்! சிபிஎம் வேட்பாளர் புகார்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
CPM candidate complains that poisoners are spreading lies to disrupt elections!

தேர்தலை சீர்குலைக்க சமூக வலைத்தளங்களில் விஷமிகளால் சில வீடியோவை வைத்து பொய் பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் வேட்பாளர்  சச்சிதானந்தம் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.                              

இந்தநிலையில் இந்த தேர்தலை சீர்குலைக்க சில விஷமிகள் வாட்ச் அப் போன்ற வலைத் தளங்களில் பொய்யான வீடியோவை பரப்பி வருகிறார்கள். இது தொடர்பாக சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் திண்டுக்கல் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் தேர்தல் ஆணையத்திடமும் புகார் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மீது அவதூறு பரப்பும் வகையில் வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ ஒன்றை வாட்ச் அப் சமூக வலைதளங்களில் விஷமிகள் பரப்பி வருகிறார்கள். உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர் இதில் தலையிட்டு இந்த அவதூறு பரப்பும் ஒளிபரப்பை தடை செய்ய வேண்டும். அவ்வாறு அவதூறு பரப்பியவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்.சச்சிதானந்தம் தனது புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.