Skip to main content

'ஓபிஎஸ்க்கு அறிவுரை சொல்லத் தகுதியில்லை' - அழைப்பை நிராகரித்த கே.பி.முனுசாமி

Published on 06/06/2024 | Edited on 06/06/2024
'OPS is not qualified to advise' - KP Munusamy rejected the call

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெளியான முடிவுகளின் அடிப்படையில் அதிமுக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில் 'மனமாட்சியம் மறந்து ஒன்றாக வேண்டும்' என எடப்பாடி பழனிசாமிக்கு அக்கட்சியில் இருந்து விலக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வாயிலாக அழைப்பு விடுத்திருந்தார். அதற்கு முன்னதாகவே சசிகலாவும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என அறிக்கை வாயிலாக வலியுறுத்தி இருந்தார்.

ஓபிஎஸ்  வெளியிட்ட இது தொடர்பான அறிக்கையில் 'ஒற்றைக் குச்சியை உடைப்பது சுலபம்; கத்தை குச்சியை முறிப்பது கடினம். இனியும் தாமதம் சொல்லி தோல்விக்குத் தொண்டர்களைப் பழக்குவது பாவ காரியம். நமது வெற்றியை நாளை சரித்திரமாக்கிட மனமாட்சியம் மறந்து ஒன்றாக வேண்டும். கட்சியை மீட்டெடுக்க எத்தகைய தியாகத்துக்கும் தயாராகுவோம்' என ஓபிஎஸ் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் கே.பி.முனுசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது சசிகலா, ஓபிஎஸ் - இன் அழைப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,  ''சசிகலா அறிக்கையை நானும் பார்த்தேன். அவர் ஜெயலலிதா இடத்தில் பணி செய்வதற்காக சென்றவர். தொடர்ந்து பணி செய்து தன்னை அந்த இல்லத்தில் நிலை நிறுத்திக் கொண்டு 36 ஆண்டுகள் ஜெயலலிதாவின் பின்னால் நின்று அதிகாரத்தை சுவைத்தவர். அப்படி சுவைத்தவர் இன்று இந்த இயக்கத்தைக் காப்பாற்றுவேன் வாருங்கள் எனக் கூறுகிறார். அனேகமாக அந்த அறிக்கை வெளியே வந்து 24 மணி நேரம் ஆகி இருக்கும் என நான் கருதுகிறேன். அந்த அறிக்கையில் ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார். அனைவரும் வாருங்கள் நான் ஜெயலலிதாவை போல எந்தப் பிரதிபலனும் இல்லாமல் உங்களுக்காக இருக்கிறேன் எனக் கூறியுள்ளார். அவர்  குடி இருக்கும் வீட்டிற்கு ஜெயலலிதாவின் பெயரை வைத்திருக்கிறார். அந்த ஜெயலலிதா இல்லத்திற்கு வாருங்கள் என்று கூறியிருக்கிறார்.

24 மணி நேரத்தில் எத்தனை பேர் சென்றார்கள் என்பதை ஊடக நண்பர்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். எப்படியாவது குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு சிலர் முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்தக் குழப்பத்தைத் தாண்டி தெளிவான நிலையில் எடப்பாடி பழனிசாமி அனைத்து தொண்டர்களையும் அரவணைத்து  தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு ஒரே ஒரு காரணம் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எங்களோடு பாஜக இருந்தது; தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் இருந்தது; பாட்டாளி மக்கள் கட்சி இருந்தது; புதிய நீதி கட்சி இருந்தது; புதிய தமிழகம் இருந்தது; ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் இருந்தது. இவ்வளவு கூட்டணியில் 2019 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள்  வாங்கிய வாக்கு 18 விழுக்காடுகள். 2024 இப்பொழுது அதிமுக கூட்டணியில் தேமுதிக இருக்கிறது. இப்பொழுது நாங்கள் வாங்கிய வாக்கு 20.46 சதவீதம்  பெற்றிருக்கிறோம். அதிமுக தலைவர்களை விமர்சித்த ஒருவரோடு கூட்டணி அமைத்த ஓபிஎஸ்க்கு அதிமுகவினர் ஒன்றுபட வேண்டும் எனப் பேசத் தகுதி இல்லை. அறிவுரைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்'' என்றார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

காவிரி விவகாரம்; கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
Edappadi Palaniswami condemns Karnataka Congress government!

தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 1 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருந்தது. இந்த நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தலைமையில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து, தமிழகத்திற்குத் தண்ணீர் தரவே முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, “காவிரி பாசனப் பகுதியில் 28 சதவீதம் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. கர்நாடகாவின் வலியுறுத்தலை மீறி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் பற்றாக்குறை இருப்பதால் தற்போதைக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட  முடியாது” என்று தெரிவித்தார். மேலும் இது குறித்து ஆலோசனை நடத்தக் கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சியினருக்கும் முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். 

தமிழகத்திற்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் நாளொன்றுக்கு ஒரு டி.எம்.சி வீதம் ஜூலை 31 வரை தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்ற காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை ஏற்க மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. காவிரி ஆறு பாயும் மாநிலங்களின் எண்ணங்களை கருத்திற்கொண்டு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை கர்நாடக அரசு ஏற்காமல் முரண்டு பிடிப்பது ஏற்கத்தக்கதல்ல.

விளம்பர போட்டோ ஷூட்டில் மட்டுமே கவனம் செலுத்தும் திமுக முதல்வர், காங்கிரசின் தயவிற்காக தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமையை விட்டுக்கொடுப்பது அவரின் தொடர் செயலற்றத்தன்மை மூலம் தெளிவாகத் தெரிகிறது. மேடையில் மட்டும் மாநில உரிமை பற்றி வாய் கிழிய பேசும் திமுக அரசின் முதல்வர் தன்னுடைய செயலற்ற தன்மையால், தமிழக மக்களின் வாழ்வோடு விளையாடி வருவது கடும் கண்டனத்திற்குரியது.

டெல்டா விவசாயிகள் நலனைக் கருத்திற்கொண்டு உடனடியாக காவிரி விவகாரத்தில் தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழ்நாட்டிற்கு உரித்தான நீரைப் பெறுமாறு திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

சாட்டை துரைமுருகன் கைது; இபிஎஸ் கண்டனம்!

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
Shattai Duraimurugan arrested; EPS condemnation

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல் நலக்குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட்டனர்.

இதனையடுத்து தேர்தலுக்கான பரப்புரை கடந்த 8 ஆம் தேதி (08.07.2024) மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. அதனைத் தொடர்ந்து தேர்தலுக்கான பரப்புரை கடந்த 8 ஆம் தேதி (08.07.2024) மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இதற்கிடையில் நேற்று (10.07.2024) காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. இதற்கிடையே விக்கிரவாண்டி தேர்தல் பரப்புரையின் போது தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்து அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை திருமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை வீராணம் பகுதியில் ஹோட்டலில் தங்கியிருந்த சாட்டை முருகனை திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். 

Shattai Duraimurugan arrested; EPS condemnation

இந்நிலையில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த மூன்றாண்டு திமுக ஆட்சியில் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், கடத்தல்காரர்கள், பாலியல் வன்கொடுமையாளர்கள் போன்றோர் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். இந்நிலையில், ஆட்சியாளர்களின் தவறுகளை சுட்டிக்காட்டும் சமூக செயல்பாட்டாளர்கள் மீதும், அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் மீதும் சர்வாதிகார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.

தன் கையில் இருக்கும் அதிகாரம், நிரந்தரமானது என்ற இருமாப்போடு, 'இம்' என்றால் சிறைவாசம் 'உம்' என்றால் வனவாசம்... என்ற ரீதியில் வழக்குகள் போட்டு கைது செய்யும் அராஜகம் நாள்தோறும் அரங்கேறி வருகிறது. நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளில் ஒருவரான திருச்சி சாட்டை துரைமுருகன் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அவர் தெரிவித்த ஒரு சில கருத்துகளுக்காக பொய் வழக்கு புனைந்து இந்த அரசு கைது செய்து சிறையில் அடைத்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும். அவர் மீதான வழக்குகளை திரும்பப்பெற்று, அவரை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று காவல்துறை கையில் வைத்திருக்கும் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.