/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a.181_0.jpg)
முன்னாள் முதல்வர் கலைஞரின் மருமகனும், முரசொலி பத்திரிக்கையின் ஆசிரியருமான இருந்த முரசொலி செல்வம் (82) உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி முரசொலி செல்வம் உயிரிழந்தார்.
கலைஞரின் மகள் செல்வியின் கணவரான செல்வம் முரசொலி மாறனின் சகோதரரும் ஆவார். திமுகவின் முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியராக இருந்த அவர், 50 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி முரசொலி நாளிதழை மேம்படுத்தியவர். முரசொலி செல்வத்துடைய மறைவுக்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் முரசொலி செல்வத்தின் உடல் பெங்களூருவில் இருந்து சென்னை கொண்டுவரப்பட்டது. இதனிடையே முரசொலி செல்வத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தவும், அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறவும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோபாலபுரம் வந்துள்ளார். அங்கு முதல்வர் ஸ்டாலினுடன் அமர்ந்து தனது ஆறுதலைத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)