Skip to main content

“வெடிகுண்டு தயாரிக்கும் அளவில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது” - ஓ.பி.எஸ் கண்டனம்

Published on 25/10/2022 | Edited on 25/10/2022

 

OPS Condemn for Coimbatore car fire accident

 

கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் இருந்த ஜமேசா முபீன் என்பவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட காவல்துறையினர் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து பின்னர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். 

 

OPS Condemn for Coimbatore car fire accident

 

உயிரிழந்த உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபீனிடம் ஏற்கனவே தேசியப் பாதுகாப்பு முகமை அதிகாரிகள் விசாரணை செய்ததும் தெரியவந்துள்ளது. மேலும், அவரது வீட்டைக் காவல்துறையினர் சோதனையிட்டதில் அதில் சில ரசாயன வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர், சார்கோல், சல்பர் போன்ற நாட்டு வெடிகுண்டு தயார் செய்யக்கூடிய சில பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

 

சம்பவம் நடந்த 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமைக்கு முன் தினமான சனிக்கிழமை 22ம் தேதி நள்ளிரவில் ஜமேசா முபீன் தன் வீட்டிலிருந்து ஒரு மர்மப் பொருளை ஐந்து பேருடன் எடுத்து சென்றது அவர் வீட்டுப் பகுதியில் அமைந்துள்ள சி.சி.டி.வி காட்சிகளில் பதிவாகியுள்ளது. அந்த சி.சி.டி.வி காட்சிகளின் உதவியோடு காவல்துறையினர் ஜமேசா முபீனுடன் இருந்த ஐந்து பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

 

இந்தக் கார் வெடிப்பு சம்பவத்திற்கு பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, “இது ஒரு திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல்.” எனத் தெரிவித்திருந்தார். 

 

OPS Condemn for Coimbatore car fire accident

 

இந்நிலையில், கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் தினமும் ஓரிரண்டு கொலைகள் என்ற நிலை படிப்படியாக மாறி, தினமும் சராசரியாக எட்டு முதல் பத்துக் கொலைகள் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது. அண்மைக் காலமாக பெட்ரோல் குண்டு கலாச்சாரம் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் வெடிகுண்டு தயாரிக்கும் அளவுக்கு சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ள திமுக அரசிற்கு அதிமுக சார்பில் எனது கடும் கண்டனம். தமிழக மக்களை வன்முறையாளர், தீவிரவாதி, பயங்கரவாதிகளிடம் இருந்து காப்பாற்ற ஆக்கப்பூர்வ நடவடிக்கை தேவை. கோவையில் கார் வெடித்த இடத்தை டி.ஜி.பி.யே நேரில் சென்று ஆய்வு செய்கிறார் என்றால் பின்னணியில் ஏதோ இருக்கிறது. 1998ல் திமுக ஆட்சியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை கோவையில் கார் வெடித்த சம்பவம் நினைவூட்டுகிறது. சட்டம் - ஒழுங்கு பிரச்சனையில் உடனடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனிக் கவனம் செலுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

''ஏன் வேக வேகமாக அதிகாலையிலேயே என்கவுன்டர்?'' - இபிஎஸ் கேள்வி

Published on 14/07/2024 | Edited on 14/07/2024
bsp

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது.

இது தொடர்பாக 11 பேர் சரணடைந்த நிலையில் 11 பேரும் கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடி காவலில் விசாரணைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தது எப்படி என்பது தொடர்பாக 11 பேரையும் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை செய்த பொழுது இன்று காலை 5 மணி அளவில் மாதாவரம் ஏரிக்கரை பின்புறம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது போலீஸ் காவலில் இருந்து திருவேங்கடம் (33 வயது) தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. தப்ப முன்ற திருவேங்கடத்தை போலீசார் என்கவுன்டர் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிகாலையில் நிகழ்ந்த சம்பவம் இந்த கொலை வழக்கில் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,  ரவுடி என்கவுண்டரில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

"Why the encounter so early in the morning?"-EPS question

செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''விக்கிரவாண்டி இடைத்தேர்தலை பொருத்தவரைக்கும் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்கவில்லை. அதனால் அதிமுக போட்டியிடவில்லை. தற்பொழுது பணபலம், அதிகார பலத்தில் திமுக வென்றுள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் பொன்முடியின் சொந்த தொகுதியில் அதிமுக அதிக வாக்கு வாங்கி உள்ளது. தமிழக விவசாயிகள், தமிழக மக்களை பற்றி திமுகவிற்கு கவலை இல்லை. கூட்டணி தான் முக்கியம் என திமுக உள்ளது. விவசாயிகளுக்காக முதல்வர் கொடுக்கவில்லை'' என்றார்.

'ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருவேங்கடம் என்ற சரணடைந்த நபர் என்கவுன்டர் செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு, 'இப்பொழுது தான் தொலைக்காட்சியில் பார்த்தேன்.  ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சுட்டுக் கொல்லப்பட்ட நபர் திருவேங்கடம் என்று கருதுகிறேன். அவர் சரணடைந்திருக்கிறார் அப்படி சரணடைந்தவரை வேக வேகமாக அதிகாலையில் அழைத்துச் சென்றதாக ஊடகத்தில் பார்த்து தெரிந்து கொண்டேன். இந்த செய்தி வாயிலாக நான் அறிந்து கொண்டது ஏன் அவசர அவசரமாக அழைத்து கொண்டு செல்ல வேண்டும்.  அவர் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை கைப்பற்றுவதற்காக அழைத்துச் சென்றதாக சொல்கிறார்கள். அப்படி அழைத்துச் செல்பவர்களை கை விலங்கு இட்டு தான் அழைத்துச் செல்ல வேண்டும். ஒரு கொலை குற்றவாளியை அப்படித்தான் கைது செய்யப்பட வேண்டும் என இருப்பதாக வழக்கறிஞர்கள் சொல்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது பாதுகாப்போடு சென்று இருக்க வேண்டும். அவர்கள் எங்கே அந்த ஆயுதத்தை மறைத்து வைத்திருக்கிறார்களோ அந்த ஆயுதத்தை கைப்பற்றுகின்ற பொழுது இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றதாக சொல்கிறார்கள்.  இதில் ஏதோ சந்தேகம் இருப்பதாக தெரிகிறது. கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகள் இல்லை என்று ஆம்ஸ்ட்ராங்கின் உறவினர்களும், அவர்களுடைய கட்சி நிர்வாகிகளும் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வேளையில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது'' என்றார்.
 

Next Story

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்; கோவையில் பரபரப்பு 

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
teacher misbehaving with schoolgirls

கோவை அருகே செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில், 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில், பால்ராஜ் என்பவர் நூலக பொறுப்பு ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் அப்பள்ளியில் பயின்று வரும் 9 ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். நாளாக நாளாக பால்ராஜின் தொந்தரவு அதிகரிக்க, ஆத்திரமடைந்த மாணவி தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். 

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளிக்குச் சென்று சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் நூலக பொறுப்பு ஆசிரியர் பால்ராஜை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. இந்த நிலையில் இது சம்பந்தமான புகார் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், குழந்தை நல வாரிய அதிகாரிகளுக்கும் சென்றுள்ளது. 

உடனடியாக களத்தில் இறங்கிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று மாணவிகளிடம் தனித்தனியே விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, பால்ராஜ் மேலும் இரு மாணவிகளுக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட குழந்தை நல அதிகாரிகள் ஆர்.எஸ்.புரம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார் பால்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.