சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (18/05/2022) அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ப.ரவீந்திரநாத் குமார் சந்தித்துப் பேசினார். அப்போது, பாரதியார் கவிதைகள் புத்தகத்தை முதலமைச்சருக்கு வழங்கினார்.
அத்துடன், தனது தேனி மக்களவைத் தொகுதி கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் ப.ரவீந்திரநாத் குமார் மனு அளித்தார்.