Skip to main content

வெங்காய விலை உயா்வு! – காரணம் மழையா? பதுக்கலா?

Published on 16/02/2021 | Edited on 16/02/2021

 

onion price hike due to rain or hoarding

 

தமிழகத்தில் ஒரு பக்கம் பெட்ரோல், டீசல் விலை உயா்வை நினைத்து பெருமூச்சு விடுவதற்குள் அத்தியாவசியப் பொருளான வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. 1 கிலோ சின்ன வெங்காயம் ரூ.80க்கு விற்ற நிலையில், இன்று விலை ரூ.150 வரை மாவட்டத்திற்குத் தகுந்தாற்போல விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் பெரிய வெங்காயம் 1 கிலோ ரூ.40க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று அதன் விலை ரூ.60 வரை உயா்ந்துள்ளது. 

 

இந்த விலை உயா்வால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா். வெங்காயம் இல்லாமல் சமையல் இல்லை என்ற நிலை இருக்கும் போது, இந்த விலையேற்றம் பலரை பாதிப்படையச் செய்துள்ளது. 60 நாள் பணப் பயிரான சின்ன வெங்காயம் பெரம்பலூர், துறையூர், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பயிரிடப்படுவது அதிகம். தற்போது பெய்த கனமழையால் வெங்காயப் பயிர்கள் அழுகியது. இதனால், சந்தைக்கு வெங்காயம் விற்பனைக்கு வரத்து இல்லாமல் போனது. இதனால், தற்போது விலை அதிகரித்துள்ளது. 

 

மற்றொரு பக்கம், கடந்த மாதம் 2 டன்னுக்கும் அதிகமான வெங்காயத்தை பெரம்பலூர் பகுதியின் மொத்த வியாபாரி ஒருவா் கோழிப் பண்ணையில் பதுக்கி வைத்து இருந்தார். அதனை அறிந்த அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனா். இப்படி அத்தியாவசியப் பொருட்கள் இயற்கை சீற்றத்தினால் அழிவதும் வியாபாரிகளின் பதுக்கல் சம்பவங்களும் பொதுமக்களை வருத்தமடையச் செய்துள்ளது. வழக்கமாக திருச்சி வெங்காய மண்டிக்கு தினசரி 300-400 டன் வெங்காயம் வரும் சூழலில் தற்போது 30டன் வெங்காயம் மட்டுமே வரத்து இருக்கிறது.

 

திருச்சியிலிருந்து 8 மாவட்டத்திற்கு வெங்காயம் சப்ளை செய்யப்பட்டு வரும் நிலையில், வெங்காயம் இல்லாததால் தற்போது வந்துகொண்டிருக்கும் பெரிய வெங்காயத்தை சப்ளை செய்து சமாளிப்பதாகவும், அதிக விலையென்பதால் சில்லறை வியாபாரிகள் வாங்குவதில்லை என்றும் வெங்காய வியாபாரிகள் கூறுகின்றனா்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இதுவரை இல்லாத அளவில் வெங்காயத்தை இருப்பு வைக்கும் மத்திய அரசு! 

Published on 16/07/2022 | Edited on 16/07/2022

 

The central government is stocking onions to an unprecedented level!

 

வெங்காயம் விலையைக் கட்டுக்குள் வைக்கும் வகையில் முன் எப்போதும் இல்லாத வகையில் அதன் கையிருப்பை 2.5 லட்சம் டன்னாக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

 

அதிகம் உற்பத்தியாகும் காலங்களில் கிலோ 10 ரூபாய்க்கு கூட கிடைக்கும் வெங்காயம், பருவமழையின் போது, 100 ரூபாயைத் தொடுவதும் வழக்கம். இந்த நிலையை மாற்ற, இதுவரை இல்லாத அளவாக 2.56 லட்சம் டன் வெங்காயத்தை இருப்பு வைத்து வருகிறது மத்திய அரசு. 

 

நாடு முழுவதும் தேசிய வேளாண் கூட்டுறவுச் சந்தைக் கூட்டமைப்பின் மூலம் வெங்காயத்தை மத்திய நுகர்வோர் பாதுகாப்புத்துறை கொள்முதல் செய்து வருகிறது. இதுவரை இல்லாத அளவாக 2.5 லட்சம் டன் வெங்காயம் இருப்பு வைப்பதன் மூலம் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை, அதன் விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 

 

Next Story

விண்ணில் பறக்கும் வெங்காயமே விலையிறங்குவாயா? - கமல்ஹாசன் ட்வீட்!

Published on 22/10/2020 | Edited on 22/10/2020

 

ONION PRICE MAKKAL NEEDHI MAIAM ACTOR KAMAL HASSAN TWEET

 

கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, தமிழகத்திற்கு வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. இதனால் வெங்காயத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. வெங்காய விலை உயர்வால் நடுத்தர, ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்த நிலையில், வெங்காயத்தின் விலையைக் குறைக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான தளர்வுகளை அறிவித்துள்ளது. அதேபோல் தமிழக அரசும், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் 'பண்ணை பசுமை' அங்காடிகள் மூலம் ரூபாய் 45-க்கு ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை விற்பனை செய்து வருகிறது.

 

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "பெரியாரே வந்தாலும் இனி வெங்காயம் என வையார். விண்ணில் பறக்கும் வெங்காய விலை பார்த்து நம் அன்னைமார்களும் இனி சமையலில் அதை வையார். விலையிறங்குவாயா வெங்காயமே?" என்று குறிப்பிட்டுள்ளார்.