Skip to main content

"எனக்கு அவமானம்; உங்களுக்கு வருமானம்... தொடருங்கள்!" - 'ஆளுநர்' தமிழிசை சவுந்தரராஜன்!

Published on 06/02/2021 | Edited on 06/02/2021

 

 

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், ஆளுநராகப் பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பத்திரிகையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

 

அப்போது பேசிய தமிழிசை சவுந்தரராஜன், மீம்ஸ் போடுபவர்களைக் குறித்து பேசினார். அப்போது, "தமிழக பாஜகவின் தலைவராக இருந்த காலகட்டத்தில், விமானப் பயணத்தில் மீம்ஸ் போடும் நண்பர் ஒருவர் அறிமுகமானார். அவரிடம் நான், 'என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது உங்களுக்கு? எல்லோரும் என்னை மட்டும் ஏன் மீம்ஸ் போடுறீங்க. வேறுயாரும் கருப்பா, குள்ளமா இல்லையா? யாருக்கும் சுருட்டை முடி இல்லையா?’ என்று கேட்டேன்.

 

‘அக்கா, உங்களைவைத்து மீம்ஸ் போட்டால்தான் அதிக வியூஸ் கிடைக்குது. அதுதான் வியாபாரம் ஆகுது. அதனால்தான், அதிக வியூஸ் வந்தால்தான் எங்களுக்கு அதிக வருமானம் வரும்’ என்றார். விமானம் தரையிறங்கும் போது, ‘அக்கா மன்னிச்சிடுங்க. உங்களை மீம்ஸ்ல இனி போடமாட்டேன்’ என்றார். அப்போது நான், ‘எனக்கு அவமானம் என்றாலும் உங்களுக்கு வருமானம் என்றால், அதை நீங்கள் தொடருங்கள். என் தன்மானத்தைக் குறைத்து உங்களுக்கு வருமானம் வருகிறது என்றால் நீங்கள் தொடருங்கள்’ என்று கூறினேன். இதுதான் என் இயல்பு. எப்போதும் நான் அதிலிருந்து மாறியது கிடையாது" இவ்வாறு பேசினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“சிபிஐ விசாரணை நிச்சயம் தேவை” - தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தல்!

Published on 07/07/2024 | Edited on 07/07/2024
Tamilisai insists CBI investigation is definitely needed 

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் (05.07.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அப்போது ஏராளமான பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள், ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்ததினர்.

அந்த வகையில் ஆம்ஸ்ட்ராங்க் உடலுக்கு தெலுங்கானாவின் முன்னாள் ஆளுநரும், பாஜகவின் மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “இந்த கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் யாரும் உண்மையான குற்றவாளிகள் கிடையாது என்று நான் சொல்லவில்லை எனக்கும் முன்னால் பேசிய ஏழைத்தாய் ஒருவர் சொல்லி விட்டு செல்கிறார். ஆகவே இது மிகவும் தீவிரம் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயம். இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நிச்சயம் தேவை. ஏனென்றால் திமுகவின் கூட்டணி கட்சியை சேர்ந்த மாவட்ட தலைவர் திருநெல்வேலியில் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

தமிழகத்தில் அரசியல் கொலைகள் அதிகரித்து இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் இறுதி சொற்பொழிவைப் பார்த்தீர்கள் என்றால் ஆளுங்கட்சியின்  முதலமைச்சரையும், முதல்வரின் மகனையும் சாடியிருக்கிறார். நம்மை வந்து அந்த கட்சியில் சேர்க்க வேண்டும் என்று அவர்கள் திட்டமிடுகிறார்கள். அதில் நாம் சேர மாட்டோம் என்று சொல்கிறார். இந்த கொலை வழக்கில் அரசியல் பின்புலம் இல்லை என ஏன் அதிகாரிகள் இப்போதே சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.  வடசென்னை முதலமைச்சர் தொகுதிக்கு உட்பட்ட பகுதி. வடசென்னை பல அராஜகத்திற்கும் பல குற்றங்களுக்கும் புகலிடமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. ஏழைகளுக்குப் புகழிடம் கொடுத்தவர்கள் கொலை செய்யப்படுகிறார். ஆகவே உடனடியாக இது குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும். இந்த கொலை வழக்கில் உடனடியாக ஆஜரானது குறித்து ஒப்புக்கொள்ள முடியாது. இது குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும். நியாயம் கிடைக்க வேண்டும். தமிழகத்தில் இதுவே அரசியல் கொலைகளில் கடைசியாக இருக்க வேண்டும் என்பதை மிகுந்த மன வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்” எனப் பேசினார். 

Next Story

''விஜய்யின் குரல் வலுவானது அல்ல; வருந்தத்தக்கக் குரல்'' - தமிழிசை கருத்து

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
'Vijay's voice is not a strong voice; Regretful voice'-tamizhisai comment

தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் நேரில் அழைத்துப் பாராட்டு தெரிவித்து வருகிறார். கடந்த வாரம் 28 ஆம் தேதி தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிலையில், இன்று புதுச்சேரி காரைக்கால் உட்பட 19 மாவட்டங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மேடை ஏறிய நடிகர் விஜய் மாணவர்கள் மத்தியில் உரையாற்ற தொடங்கினார். அவர் உரையில், ''கடந்த மே மாதம் ஐந்தாம் தேதி நீட் எக்ஸாம் நடந்தது. அதில் சில குளறுபடிகள் எல்லாம் நடந்ததா செய்திகள் எல்லாம் பார்த்தோம், படித்தோம். அதன் பிறகு என்ன ஆகிவிட்டது என்று பார்த்தால் நீட் தேர்வுக்கு மேலே இருக்கின்ற நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் போய்விட்டது. இனிமேல் நாடு முழுக்க நீட் தேவை இல்லை என்பதை நாம் செய்திகள் மூலம் தெரிந்து கொண்ட விஷயம். சரி இதற்கு என்னதான் தீர்வு, நீட் விலக்குதான் தீர்வு. தமிழக அரசு சட்டமன்றத்தில் கொண்டு வந்திருக்கும் தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். இதற்கு ஒன்றிய அரசு காலதாமதம் செய்யாமல் தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து இதைச் சீக்கிரமாக சால்வ் பண்ண வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இதற்கு  நிரந்தர தீர்வுதான் என்ன என்று கேட்டால் கல்வி வந்து பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும். ஒருவேளை அதில் ஏதாவது சிக்கல் இருக்கு என்றால் ஒரு இடைக்கால தீர்வாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திருத்தி ஒரு சிறப்பு பொதுப்பட்டியல் என்று உருவாக்கி அதில் கல்வி மற்றும் சுகாதாரத்தைச் சேர்க்க வேண்டும். இப்பொழுது இருக்கிற பொதுப்பட்டியலில் என்ன பிரச்சனை என்றால் அதில் உள்ள துறைகள் எல்லாம் பார்த்தால் மாநில அரசுகளுக்கு என்னதான் அதிகாரம் இருந்தாலும் அது முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கு. மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் தரப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். இந்தச் சந்தர்ப்பத்தில் என்னுடைய பரிந்துரையைச் சொல்ல வேண்டும் என ஆசைப்பட்டேன். இதுதான் என்னுடைய தனிப்பட்ட ஒரு கருத்து நீட்டைப் பற்றி'' என்றார்.

'Vijay's voice is not a strong voice; Regretful voice'-tamizhisai comment

நடிகர் விஜய்யின் நீட் பற்றிய பேச்சு குறித்து தனியார் சேனலுக்கு தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ள தமிழிசை சௌந்தரராஜன், ''இது வலுவான குரல் அல்ல வருந்தத்தக்க குரல் என்று நான் சொல்கிறேன். எல்லாரும் சொல்கிறார்கள் என்பதற்காக மாணவர்களுக்கு நன்மை தருகின்ற ஒரு திட்டத்தை வெளியே தள்ள முடியாது. சட்ட விதிகளுக்குள் பேசினால் சுப்ரீம் கோர்ட் ஆர்டர். விஜய் 3 விஷயங்களை சொல்லி இருக்கிறார். நீட் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பட்டியல் இன  மாணவர்களுக்கு எதிராக இருக்கிறது என்று சொல்லியுள்ளார். அதை நான் மறுக்கிறேன். நீட்டில் எல்லா இட ஒதுக்கீடும் பின்பற்றப்படுகிறது. இரண்டாவது சிலபஸ்-ஐ வைத்து சொல்லி இருக்கிறார். நீட்டில் எல்லா சிலபஸ்ஸும் பின்பற்றப்படுகிறது. மூன்றாவது கல்வி மாநிலப் பட்டியலில் 1975 க்கு முன்னால் இருந்தது என்று சொல்கிறார். அது திமுக இருக்கும் போது தான் மத்திய பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அவர்கள் (திமுக) மத்தியில் பல ஆண்டுகள் இருந்த பின்பும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர முயற்சி செய்யவில்லை. ஆனால் புதிய கல்விக் கொள்கை மத்தியப் பட்டியல், மாநிலப் பட்டியல் என இல்லாமல் பொதுவான மக்களுக்கு, மாணவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை பொறுத்தவரை எத்தனை கிராமப்புற மாணவர்கள் இதற்கு நீட் தேர்வுக்கு முன்னால் பயன் பெற்றார்கள்? நீட் தேர்வுக்கு பின்னால் பலன் பெற்றார்கள் என்று பார்க்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.