
சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரு தலை காதல் விவகாரத்தில் இளைஞர் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரகடம் அருகே உள்ள வடக்குபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அன்புச்செல்வன். இவர் அதே பகுதியில் உள்ள இளம்பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பெண்ணின் சகோதரன் அவரிடம் தகராறு செய்துள்ளார். இதனையறிந்த அன்புச்செல்வனின் உறவினர்கள் பெண்ணின் சகோதரரை தாக்கியுள்ளனர். இதனால் பிரச்சனை ஏற்பட அன்புசெல்வனுடன் பேசுவதை அப்பெண் நிறுத்தியுள்ளார். இதனால் விரக்தியிலிருந்த அன்புச்செல்வன் பூச்சிமருந்து சாப்பிட்ட நிலையில், அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)