Skip to main content

பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பலி; 9 பேர் படுகாயம்

Published on 06/03/2023 | Edited on 06/03/2023

 

One passed away, 9 injured in Cuddalore firecracker factory explosion

 

புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் மணவெளியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி கோசலை (48). இவர் கடலூர் அருகே ரெட்டிச்சாவடி அடுத்த சிவனார்புரம் தென்னந்தோப்பில் 'கோசலை ஃபயர் ஒர்க்ஸ்' என்ற பெயரில், கூரை கொட்டகையில் பட்டாசு குடோன் நடத்தி வருகிறார். இங்கு நாட்டுவெடி, வானவெடி உள்ளிட்ட வெடிகள் தயார் செய்யப்படுகின்றன.

 

இந்நிலையில், புதுச்சேரி மாநில மற்றும் கடலூர் மாவட்ட கடற்கரையோரங்களில் மாசிமகத் திருவிழா இன்றும் நாளையும் நடக்கிறது. இந்த மாசிமகத்தில் கடற்கரையில் சாமிகளுக்கு தீர்த்தவாரி நடக்கும். நாளை இரவு தெப்பஉற்சவம் நடக்கும். அப்போது நாட்டுவெடி, வானவெடிகள் வெடிப்பது வழக்கம். இந்த திருவிழாவுக்காக நாட்டுவெடிகளை ஆர்டர் எடுத்து தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாக தயார் செய்து வந்துள்ளனர்.

 

அப்போது நேற்று மாலை 4.15 மணியளவில் திடீரென குடோனில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின. பட்டாசுகள் ஒவ்வொன்றாக வெடித்ததால் குடோன் தரைமட்டமானது. தொடர்ந்து வெடிகள் ஆங்காங்கே வெடித்த வண்ணம் பற்றி எரிந்தது. வெடிகுண்டு வெடித்தது போல் பயங்கர சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் ஓடிச் சென்று பார்த்தனர். அப்போது அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளித்ததோடு, அங்கு வேலை பார்த்த தொழிலாளர்கள் பலத்த காயங்களுடன் வெளியே ஓடி வந்தனர். சிலர் பட்டாசு வெடித்ததில் தூக்கி வீசப்பட்டு படுகாயங்களுடன் கிடந்தனர். இதனைப் பார்த்த மக்கள் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களால் அணைக்க முடியவில்லை. பின்னர் இதுபற்றி கடலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். 

 

இந்த தீ விபத்தில் மணவெளியை சேர்ந்த பூபாலன் மனைவி மல்லிகா(60) என்பவர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி பலியானார். மேலும், அரியாங்குப்பம் மதன் மனைவி மேகலா(34), காசான்திட்டு ராஜ்குமார் மனைவி மலர்க்கொடி(35), சிவநாதபுரம் சங்கர் மகன் சக்திதாசன்(25), ஓடவள்ளியை சேர்ந்த அய்யனார் மனைவி சுமதி(41), சிவனார்புரம் இளங்கோவன் மனைவி பிருந்தாதேவி(35), பாக்கம் கூட்ரோடு ராஜேந்திரன் மனைவி அம்பிகா(18), காசான்திட்டு செல்வம் மகள் செவ்வந்தி(19), லட்சுமி (25) மற்றும் பட்டாசு குடோன் உரிமையாளரான சேகர் மனைவி கோசலை  ஆகிய 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

 

இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் மற்றும் ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் படுகாயமடைந்த பிருந்தாதேவி, செவ்வந்தி, லட்சுமி, அம்பிகா, சுமதி ஆகிய 5 பேர் கடலூர் அரசு மருத்துவமனையிலும் மலர்கொடி, சக்திதாசன், மேகலா, கோசலை ஆகிய 4 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

One passed away, 9 injured in Cuddalore firecracker factory explosion
சேகர் - அவரது மனைவி கோசலா

 

இந்த விபத்து தொடர்பாக ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்களான சேகர்(55), அவரது மனைவி கோசலை(50) ஆகிய இருவரையும் ரெட்டிச்சாவடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக இவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணைக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

 

இதனிடையே வெடிவிபத்தில் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை அளிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினர். அதே சமயம் வெடிவிபத்தில் இறந்த மல்லிகா குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதுடன், அவரது குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி; கண் இமைக்கும் நேரத்தில் உயிர் தப்பிய தாய், மகள்

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
Container lorry lost control accident near Ambur

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து ஓசூர் நோக்கிச்சென்ற கண்டெய்னர் லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு வேலியில் மோதியுள்ளது, இதில் சாலை ஓரம் இருந்த தடுப்பு வேலிகள் சுக்குநூறாக நொருக்கிய கண்டெய்னர் சர்வீஸ் சாலையில் நின்றுள்ளது, இந்நிலையில், அதிர்ஷ்டவசமாக அச்சாலை வழியாக சென்ற தாய் மற்றும் மகள் கண் இமைக்கும் நேரத்தில் விபத்தில் இருந்து உயிர்தப்பினர்,

இதனைத் தொடர்ந்து  விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் உடனடியாக அங்கிருந்து லாரியுடன் தப்பிச்சென்ற நிலையில், இவ்விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குபதிவு செய்து, அப்பகுதியில் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்க்கொண்டு விபத்து ஏற்படுத்திவிட்டு லாரியுடன் தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

மேலும் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி தடுப்பு வேலியில் மோதி தாய் மற்றும் மகள் உயிர் தப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'ஒரு மாதத்திற்குள் பிரச்சினைகளைக் தீர்க்க வேண்டும்'- ஓய்வு பெற்ற நியாயவிலை கடை பணியாளர் சங்கம் கோரிக்கை

Published on 21/07/2024 | Edited on 21/07/2024
'Problems should be resolved within a month'- Retired Fair Price Shop Workers Association demands

சிதம்பரத்தில் தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தின் மாநில அமைப்பு கூட்டம் நடைபெற்றது. சங்கத்தில் மாநில அமைப்பாளர் துரை. சேகர் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் தங்கராசு அனைவரையும் வரவேற்றார்.  

இதில் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி சங்க நடவடிக்கைகள் குறித்து பேசினார்.  தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கோ.ஜெயச்சந்திர ராஜா, மாநில இணை பொதுச் செயலாளர் சிவக்குமார், சுவாமிநாதன், விஸ்வநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.  ஓய்வு பெற்ற நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

இதனைத் தொடர்ந்து சங்கத்தின் சிறப்பு தலைவர் கு. பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'கூட்டுறவுச் சங்கங்களில் ஏற்படும் லாப நட்ட கணக்குகளை வைத்துக்கொண்டு கூட்டுறவும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணப்பயன்களை தடுப்பது கண்டிக்கத்தக்கது.  கூட்டுறவுத்துறை நியாய விலை கடை பணியாளர் ஓய்வுக் கால சலுகைகள் குறித்து கூட்டுறவுத் துறை ஆய்வு செய்ய வேண்டும்.

கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் எந்த பலனும் ஊழியர்களுக்கு ஏற்படவில்லை.  ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் பண பலன்கள் அவர்களுக்கு சென்றடையாவிட்டால் தமிழகம் முழுவதும் ஓய்வு பெற்ற நியாய விலை கடை பணியாளர்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஒரு மாதத்திற்குள் கூட்டுறவுத் துறையில் ஓய்வு பெற்ற நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தின் பிரச்சினைகளை கூட்டுறவுத்துறை தீர்க்க வேண்டும் இல்லையென்றால் செப்டம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் இது குறித்து போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்'' எனக் கூறினார்.

The website encountered an unexpected error. Please try again later.