Skip to main content

கழிவறை கட்டுவதில் ஊழல்; டிஜிட்டல் பேனர் வைத்த பொதுமக்கள்

Published on 06/08/2024 | Edited on 06/08/2024
One crore scam in toilet construction; Citizens holding digital banners

கடலூரில் பிரதம மந்திரி இலவச கழிவறை கட்டும் திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாக பொதுமக்கள் ஒன்றாகச் சேர்ந்து டிஜிட்டல் பேனர் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார்ந்த பேனரை அப்புறப்படுத்தினர்.

கடலூர் மாவட்டம் டி.நெடுஞ்சேரி பகுதியில் பிரதம மந்திரி இலவச கழிவறை கட்டும் திட்டத்தில் 90 கழிவறைகள் கட்டப்படாமல் மோசடி நடைபெற்றுள்ளது எனவும், அதேபோல் கடந்த இரண்டு ஆண்டுகளில் 100 நாள் வேலை திட்டத்தில் வராதவர்களுக்கு ஊதியம் வழங்கியதாக சொல்லி 50 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளது என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பலமுறை ஆதாரங்களுடன் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை என அதிருப்தியில் இருந்த மக்கள் ஒன்றாகச் சேர்ந்து நடைபெற்ற ஊழலைப் பட்டியலிட்டு, 'சமுதாய மக்களை ஏமாற்றிக் கொள்ளையடித்த பெருச்சாளிக்கு கை விலங்கு போட அழைப்பதில்' என்ற தலைப்பில் மிகப்பெரிய பேனர் ஒன்றை வைத்தனர்.

பேனர் வைக்கப்பட்ட பகுதிக்கு அருகிலேயே 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் சிறப்பு முகாம் பெற்றது. இதனால் இந்த பேனர் வைக்கப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக அங்கு வந்த போலீசார் இந்த டிஜிட்டல் பேனரை அகற்றியதோடு இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

 
The website encountered an unexpected error. Please try again later.