
தனியார் பேருந்து மோதி ஒன்றரை வயது குழந்தைதூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பகுதி மக்கள் தனியார் பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்து தாக்குதலில் ஈடுபட்டனர்.
சேலம் வாய்க்கால் பட்டறை பகுதியைச் சேர்ந்தஜெகதீசன் என்பவர் இருசக்கர வாகனத்தில் தனது மகள் வினிதா மற்றும் பேரன் நிதின் (ஒன்றரை வயது) உள்ளிட்டோருடன் வாழப்பாடி அருகே உள்ள முத்துமலை முருகன் கோவிலுக்கு சென்றிருந்தார். கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த பொழுது ஆத்தூர் நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்று இவர்கள் பயணித்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் ஜெகதீசனும் வினிதாவும் கீழே விழுந்தனர். சிறுவன் நிதின் தூக்கி வீசப்பட்டான். படுகாயமடைந்த நிலையில் நிதின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தனியார் பேருந்தை அடித்து சேதப்படுத்தினர். உடனடியாக போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. பேருந்து மோதி ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)