Skip to main content

பிச்சாவரம் கடலில் விடப்பட்ட ஆலிவ் ரெட்லி கடல் ஆமைக் குஞ்சுகள்

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

Olive Radley sea turtle hatchlings released in Pichavaram sea

 

சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் வனச்சரகத்தில் ஆண்டு தோறும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை கடல் ஆமை முட்டைகள் சேகரம் செய்து செயற்கை பொறிப்பகத்தில் பாதுகாத்து குஞ்சுகள் பொறித்தவுடன் பாதுகாப்பாக கடலில் விடப்பட்டு வரப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான ஆமை முட்டைகளை பிச்சாவரம் மாங்குரோவ் காட்டினை ஒட்டிய கடற்கரைப் பகுதியில் செயற்கை ஆமை முட்டைகள் பொறிப்பகம் அமைத்து அப்பகுதிகளில் ஆமை முட்டைகள் சேகரித்து பாதுகாப்பாக வைக்கப்பட்டதில் முட்டையில் பொறிந்து குஞ்சுகள் வெளியே வருவதை கடலில் பாதுகாப்பாக விடும் நிகழ்சி திங்களன்று நடைபெற்றது.

 

இதில் 2,137 குஞ்சுகள் வெளியே வந்ததை பிச்சாவரம் வனச்சரக அலுவலர் கமலக்கண்ணன் முன்னிலையில் ராஜா முத்தையா கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவத்துறை தலைவர் ராமநாதன் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஜெயஸ்ரீ, கடலூர் குழந்தை நல அறுவை சிகிச்சை நிபுணரும் இயற்கை ஆர்வலருமான இளந்திரையன் மற்றும் இயற்கை ஆர்வலர்கள், சிதம்பரம் மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா, பிச்சாவரம் வனச்சரக வனவர் அருள்தாஸ், வனக்காப்பாளர் ராஜேஷ்குமார், வனப்பணியாளர்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு ஆமைக் குஞ்சுகளை கடலில் பாதுகாப்பாக விட்டனர்.

 

இதுவரை பிச்சாவரம் வனச்சரகத்தில் 35,412 ஆமை முட்டைகள் சேகரம் செய்து அதில் 8,961 குஞ்சு பொறிக்கப்பட்டு கடலில் விடப்பட்டுள்ளது. வரும் மே மாதம் வரை குஞ்சுகள் பொறிந்து கடலில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் ஆலிவ் ரெட்லி வகை ஆமைகள் கடலில் மீன் வளத்தை அழிக்கக்கூடிய ஜெல்லி வகை மீன்களை அழிக்கக் கூடியது. எனவே கடலில் ஜல்லி வகை மீன்கள் அதிக அளவு பெருகிவிட்டால் மீன்கள் கடலில் இருக்காது. அதனால் ஆண்டு தோறும் இந்த ஆமைக் குஞ்சுகளை அதிக அளவில் கடலில் விடும் நிகழ்ச்சி வனத்துறை சார்பில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த ஆண்டு முட்டையில் இருந்து வெளிவரும் ஆமைக் குஞ்சு அடுத்த ஆண்டு இதே நேரத்தில் அதே இடத்தை தேடி வந்து முட்டையிட்டு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்; அதிர்ச்சியில் மீனவ கிராமம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Mysterious objects that suddenly wash ashore; A fishing village in shock

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்பொருளை ஜேசிபி மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பொருள் கடலில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்பதை உணர்த்துவதற்காக மிதக்க விடும் 'போயம்' என்ற கருவி என்பது தெரியவந்தது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள நாயக்கர்குப்பம் மீனவ கிராமத்தில் 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில எழுத்துக்களில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று ஒதுங்கியது. அதுவும் அந்த நேரத்தில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
Ban for tourists to go to Dhanushkodi

தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதித்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடி தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் தனுஷ்கோடி பகுதியில் நேற்று (31.03.2024) மாலை 6 மணியளவில் தனுஷ்கோடி 3வது சட்டம் முதல் அரிச்சல்முனை வரை உள்ள தெற்கு மன்னார் வளைகுடா பகுதியில் 6 மீட்டர் முதல் 10 மீட்டர் வரை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ராட்சத அலைகளும் எழுந்துள்ளன.

இதன் காரணமாக தேவலயாம், சாலையோரங்களில் உள்ள கடைகளிலும் கடல் நீர் உட்புகுந்தன. கடல் ஓரங்களில் வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான மதிப்பிலான மீன் பிடி வலைகள் மணலில் புதைந்து சேதமடைந்துள்ளன. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடியில் தற்போது சூறைக்காற்றுடன் 5 அடி உயரம் வரை கடல் அலைகள் எழுவதால் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடி கடலுக்குச் செல்ல தடை விதித்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.