Skip to main content

பாம்பு கடித்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழப்பு

Published on 23/06/2023 | Edited on 23/06/2023

 

An old woman who was being treated for a snake bite died

 

ஈரோடு மாவட்டம், நம்பியூரை அடுத்துள்ள கரிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரி (73). இவர் தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் சம்பவத்தன்று வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது இடது காலில் பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து, அந்தப் பாம்பை அடித்துக் கொன்று தன்னுடன் எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்த ஈஸ்வரி, தனது மகன் கிருஷ்ணமூர்த்தியிடம் தன்னை பாம்பு கடித்து விட்டதாகக் கூறியுள்ளார்.

 

இதையடுத்து, ஈஸ்வரியை கோபியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஈஸ்வரி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து, வரப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்