Skip to main content

ஆகாயத் தாமரையில் சிக்கிய மூதாட்டி; பல மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு 

Published on 21/10/2023 | Edited on 21/10/2023

 

The old woman trapped in the  lotus; Recovery after hours of struggle

 

கீரை பறிக்கச் சென்ற மூதாட்டி வாய்க்காலில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளுக்கிடையே சிக்கிக்கொண்ட நிலையில் மீட்புப்படையினரின் பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டார். இச்சம்பவம் ஈரோட்டில் நிகழ்ந்துள்ளது.

 

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளது தடப்பள்ளி வாய்க்கால். இந்த பகுதியில் வசித்து வந்த பொன்னம்மாள் என்ற 80 வயது மூதாட்டி ஒருவர், வாய்க்காலை ஒட்டியுள்ள பகுதியில் கீரை பறிக்கச் சென்றுள்ளார். அப்பொழுது வாய்க்காலில் இருக்கும் ஆகாயத்தாமரை செடிகளுக்கு இடையே மூதாட்டி சிக்கிக்கொண்டார். அந்த பகுதியில் அதிக மக்கள் நடமாட்டம் இல்லாததால் மூதாட்டி சேற்றில் சிக்கியது யாருக்கும் தெரியாமல் போனது.  விடிய விடிய உயிருக்குப் போராடிய நிலையில் அந்த மூதாட்டி இருந்துள்ளார். அடுத்த நாள் காலை அந்த பகுதிக்கு எதேச்சையாக வந்த சிலர் மூதாட்டி சேற்றில் சிக்கிக் கொண்டது குறித்து மீட்புப் படையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு வந்த மீட்புப் படையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவரை பத்திரமாக மீட்டனர். உடனே மூதாட்டி 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடுத்தடுத்து மூன்று கடைகளில் கொள்ளை;போலீசார் விசாரணை

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
Robbery in three shops in succession; police investigation

ஈரோட்டில் மூன்று கடைகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜாபர். இவர் அந்த பகுதியில் துரித உணவு கடை வைத்திருந்தார். நேற்று இரவு 12 மணியளவில் வியாபாரம் முடிந்தவுடன் கடையை பூட்டிவிட்டு சென்று விட்டார். இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் சாவியை திறந்து அதில் இருந்த ரூ.3000 பணம் திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது.

அதனருகே உள்ள மற்றொரு குளிர்பான கடையின் பூட்டை  உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பணம் இல்லாததால் திரும்பிச் சென்று விட்டனர். குளிர்பானம் கடை அருகே ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் காய்கறி கடை நடத்தி வந்தார். நேற்றிரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு சென்றவர் இன்று காலை வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே கல்லாப்பெட்டியில் இருந்த ரூ. 26 ஆயிரம் ரொக்க பணம் திருட்டுப் போய் இருந்தது.

இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.  ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து மூன்று கடைகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி இருப்பது அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

கல்குவாரியில் விழுந்த தொழிலாளி சடலமாக மீட்பு

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
A worker who went to bathe in Calquary died

கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் அடுத்த பொன்னாச்சி பகுதியைச் சேர்ந்தவர் புட்டப்பா (50). இவர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பெஜிலட்டி பகுதியில் உள்ள ஒரு கல் குவாரியில் கல் சைனிங் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நண்பருடன் அதேப்பகுதியில் உள்ள மற்றொரு கல்குவாரியில் குளிக்க சென்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி நீரில் மூழ்கினார். இது பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர் உடனடியாக இது குறித்து கல்குவாரியில் உள்ள மேலாளர் இடம் தகவல் தெரிவித்தார். பர்கூர் போலீசாரும், அந்தியூர் தீயணைப்பு  வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் புட்டப்பாவை தேடினர். இரவு நேரம் என்பதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

நேற்று 2 -வது நாளாக தேடும் பணி நடந்தது. அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று மாலை புட்டப்பா உடல் மீட்கப்பட்டது.இது குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.