old man lost their life of severe stomach pain

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பணிக்கம்பாளையத்தை சேர்ந்தவர் குப்புசாமி(78). இவர், பெருந்துறை வாரச்சந்தை பகுதியில் சோடா கடை நடத்தி வந்தார். குப்புசாமிக்கு கடந்த 2 வருடங்களாக வயிற்று வலி இருந்து வருகிறது. இதனால், ஈரோடு மற்றும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பார்த்துள்ளார்.

Advertisment

இருப்பினும் வயிற்று வலிகுணமாகாததால், மனவேதனை அடைந்த குப்புசாமி அவரது சோடா கடையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குப்புசாமி மகன் சந்திரசேகரன் பெருந்துறை போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment