/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hw-fell-passed.jpg)
திருச்சி லால்குடி அருகே உள்ள தச்சங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன்(75). இவர் முன்னாள் ராணுவ வீரராவார். கழிவறைக்கு சென்ற இவர் எதிர்பாராதவிதமாக வழுக்கி கீழே விழுந்தார். அப்போது அருகே நின்று கொண்டிருந்த அவரது மனைவி அன்னபூரணி ஓடிச்சென்று கணவரை பிடிக்க முயன்றார். ஆனால் அவரும் தவறி வழுக்கி விழுந்தார். இதில் இருவரது தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து மற்றொரு அறையில் இருந்த அவர்களது மகன்கள் ராஜேந்திரன் மற்றும் ராமச்சந்திரன் இருவரும் சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்தனர். தாயும், தந்தையும் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக பெற்றோர்களை லால்குடி அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)