Skip to main content

கர்ப்பிணியிடம் லஞ்சம் கேட்டு திட்டிய நர்ஸ்- கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை!

Published on 01/06/2019 | Edited on 01/06/2019

வேலூர் மாவட்டம், பென்னாத்தூரை சேர்ந்தவர் வினிதா. இவர் சமீபத்தில் கருத்தரித்துள்ளார். இதற்கான பரிசோதனைக்காக பென்னாத்தூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்து பதிவு செய்துள்ளார். கர்ப்பம் உறுதியானதும், பென்னாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்திற்கு மனு செய்துள்ளார்.

 

 Nurse to bribe pregnant womanமுதல் கட்டமாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், இரண்டாம் கட்டமாக 4 ஆயிரம், மீதி பணம் மூன்றாவது கட்டமாக வங்கி கணக்கில் செலுத்தப்படும். அதன்படி முதல் கட்ட நிதியை வாங்கியுள்ளார் வினிதா. இரண்டாம் கட்ட நிதி பென்னாத்தூர் கிராம செவிலியர் லதாவிடம் கேட்டுள்ளார். இரண்டாவது தவணைக்கு பரிந்துரை செய்ய வேண்டுமானால் ஆயிரம் ரூபாய் லஞ்சம் வேண்டும் எனக்கேட்டுள்ளார். பணம் கேட்டதோடு அந்த கர்ப்பிணி பெண்ணை மோசமாக பேசியுள்ளார். 

 

 

 Nurse to bribe pregnant womanஇதில் அதிருப்தியான அந்த பெண், தனது கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் இதுபற்றி கூறியுள்ளார். அவர்கள் அதிருப்தியாகி இதுப்பற்றி வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு சென்று இதுப்பற்றி புகார் தந்தனர். அவர்கள் போட்டு தந்த திட்டப்படி ஆயிரம் ரூபாய் லஞ்சம் மே 31ந்தேதி வினிதா கொண்டு சென்று அந்த செவிலியர் லதாவிடம் தந்துள்ளார். அவர் பணம் வாங்கி தன்னிடம் வைத்துக்கொண்டதை மறைந்திருந்த பார்த்து உறுதி செய்துக்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் அவரை சுற்றி வளைத்து அந்த ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். இதனால் வேலூர் மாவட்ட அரசு மருத்துவத்துறை வட்டாரத்தில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கடல் அலையில் சிக்கி ஐடி ஊழியரர்கள் இருவர் உயிரிழப்பு

Published on 21/07/2024 | Edited on 21/07/2024
2 Chennai IT employees lose their live in Parangipet sea wave


சிதம்பரம், பரங்கிப்பேட்டை அருகே சாமியார்பேட்டை கடற்கரைக்கு ஞாயிற்றுக்கிழமை மதியம் கூடுவாஞ்சேரியில் உள்ள ஜோ.கோ கார்பரேசன் ஐடி கம்பெனியில் பணிபுரியும் கணினி பொறியாளர்கள் ஷாம் சுந்தர் (26) கோகுல் பிரசாத் (26) பொள்ளாச்சியை சேர்ந்த இவர்கள் கூடுவாஞ்சேரியில் தங்கி பணி செய்து வருகிறார்கள்.  

இவர்களுடன் 2 ஆண் மற்றும் 2  பெண் நண்பர்கள் என மொத்தம் 6 பேர் பாண்டிச்சேரியில் இருந்து கார் மூலம் பிச்சாவாராம் சுற்றுலா தளத்திற்கு சென்று படகு சவாரி செய்துவிட்டு பின்னர் சாமியார் பேட்டை கடற்கரைக்கு குளிக்க வந்துள்ளனர்.அப்போது ஷாம் சுந்தர் மற்றும் கோகுல பிரசாத் ஆகியோர் கடல் அலையில் சிக்கி அடித்து சென்றுள்ளனர். இதனைப் பார்த்தவர்கள் அவர்களை மீட்டு 108 அவசர ஊர்தி மூலம் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்து இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

சம்போ செந்தில் வெளிநாடு தப்பியோட்டம்?

Published on 21/07/2024 | Edited on 21/07/2024
Sambo Senthil fled abroad

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52) என்பவர் கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) அன்று மாலை கொலை செய்யப்பட்டார். இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலைக்கான காரணத்தைக் கண்டறிந்து சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவின்படி தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஏற்கனவே 14 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இத்தகைய சூழலில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை செய்து இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த கோதண்டராமன் என்பவரது மகன் ஹரிதரன் (வயது 37) என்பவரை நேற்று (20.07.2024) கைது செய்தனர். மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட ஹரிதரன் வழக்கறிஞராக பணியாற்றி வருவதும், இவர் அதிமுகவின் கடம்பத்தூர் ஒன்றிய குழு உறுப்பினராக உள்ளதும் தெரியவந்தது. 

Sambo Senthil fled abroad

இவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிஹரன் மற்றும் அருளின் நண்பர் ஆவார். அருள் இவ்வழக்கில் குற்றவாளிகள் பயன்படுத்திய 6 செல்போன்களை ஹரிதரனிடம் ஒப்படைத்துள்ளார். இந்த செல்போன்களை மற்றொரு குற்றவாளியான ஹரிஹரன் யாருக்கும் தெரியாமல் தூக்கி எறியுமாறு ஹரிதரனிடம் தெரிவித்ததன் பேரில், ஹரிதரன் 6 செல்போன்களையும் சேதப்படுத்தி திருவள்ளுவர் மாவட்டம், வெங்கத்தூரில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் வீசி எறிந்துள்ளார்.

இதனையடுத்து தனிப்படை போலீசார் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையைச் சேர்ந்த நீச்சல் பயிற்சி பெற்ற வீரர்களின் உதவியுடன் கொசஸ்தலை ஆற்றிலிருந்து 3 செல்போன்கள் மீட்கப்பட்டன. மற்ற செல்போன்களையும் கண்டுபிடிக்க மீட்புக் குழுவினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அதே சமயம் அதிமுக கவுன்சிலர் ஹரிதரனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். 

Sambo Senthil fled abroad

அதே சமயம் ஹரிதரன், வெங்கத்தூர் கூவம் ஆற்றில் வீசியெறிந்த 3 செல்போன்கள் நேற்று (20.07.2024) மீட்கப்பட்ட நிலையில் அந்த செல்போன்கள் தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டன.  மேலும் 3 செல்போன்களை தீயணைப்புத்துறையினர் இன்று (21.07.2024) 2வது நாளாக ஆற்றில் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில்  தேடப்படும் ஏற்கனவே லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்ட ரவுடி சம்போ செந்தில் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு தப்பிச் சென்றாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் தோப்பு பாலாஜி மீது வெடிகுண்டு வீசிய வழக்கில் சம்போ செந்திலுக்கு எதிராக கடந்த 2020 ஆம் ஆண்டு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.