Number of patients receiving treatment close to 9 thousand - Corona situation in Tamil Nadu

தமிழகத்தில் பரவலாகக் குறைந்திருந்த கரோனா பாதிப்பானது சில நாட்களாகச் சற்று அதிகரித்துப் பதிவாகி வந்த நிலையில் பல இடங்களில் கரோனா கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என நேற்று தமிழக மருத்துவத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

Advertisment

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,461 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் 1,484 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8,222 இருந்து 8,970 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 736 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். சென்னையில் மட்டும் ஒரே நாளில் 632 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் மட்டும் 543 பேருக்கு கரோனா பதிவு செய்யப்பட்டிருந்தது. செங்கல்பட்டில்-239 பேருக்கும், கோவை-70, திருவள்ளூர்-79, காஞ்சிபுரம்-59, திருச்சி-42 பேருக்கு என கரோனா பதிவாகியுள்ளது.

Advertisment

இந்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என மருத்துவத்துறை செயலாளர் செந்தில்குமார் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 'சந்தைகள், வணிக வளாகங்கள், பொது இடங்களில் 26 சதவீதம் கரோனா பாதிப்பு பதிவாகிறது. பணியிடங்களில் 18 சதவீதமும், கல்வி நிறுவனங்கள், விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் 16 சதவிகித தொற்று பதிவாகிறது. எனவே வெப்ப பரிசோதனை, மாஸ்க் அணிதல் உள்ளிட்ட கரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதிசெய்ய வேண்டும்' என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.