Skip to main content

8 ஆயிரத்தை தாண்டிய சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை- இன்றைய கரோனா நிலவரம்!

 

Number of patients receiving over 8 thousand treatment- Today's corona situation!

 

தமிழகத்தில் பரவலாக குறைந்திருந்த கரோனா பாதிப்பானது சில நாட்களாக சற்று அதிகரித்துப் பதிவாகி வந்த நிலையில் பல இடங்களில் கரோனா கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என நேற்று தமிழக மருத்துவத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

 

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,472 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் 1,461பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7,548 இருந்து 8,222 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 697 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். சென்னையில் மட்டும் ஒரே நாளில் 543 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் மட்டும் 624 பேருக்கு கரோனா பதிவு செய்யப்பட்டிருந்தது. செங்கல்பட்டில்-240 பேருக்கும், கோவை-181, திருவள்ளூர்-75, காஞ்சிபுரம்-47,விருதுநகர், திருச்சியில் தலா 36 பேருக்கு என கரோனா பதிவாகியுள்ளது.