தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனாபாதிப்புஅதிகரித்து வரும் நிலையில்,இதுவரை கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை4,132 ஆக அதிகரித்துள்ளது. தமிழக அரசுபொதுமுடக்கத்தை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டித்திருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் பொதுமுடக்கம் தளர்வுகள் இல்லாமல் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஞாயிற்றுக் கிழமைகளில் டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதேபோல் சென்னையில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னையில் இரவு 7 மணி வரை ஹோட்டல் அறையில் அமர்ந்து சாப்பிட விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டிற்கானதளர்வு அமலுக்கு வந்துள்ளது. தமிழக அரசு 1ம் தேதி முதல் சென்னையில் ஓட்டல்களில் சமூக இடைவெளியை கடைபிடித்து50 சதவிகித இருக்கைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்எனதளர்வு அறிவித்த நிலையில், ஓட்டல் உரிமையாளர் சங்கம் இன்று முதல் அமர்ந்து சாப்பிடும் முறையைஅமல்படுத்தியுள்ளது.