
கோப்புப்படம்
வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவில் இருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்தது. சென்னையில் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது.
மழை வெள்ளத்தில் பாம்பு, விஷப்பூச்சிகள் பாதிப்புகள் இருந்தால் அவற்றை பிடிப்பதற்கான எண்கள் வழங்கப்பட்டுள்ளது. போரூர், ஐயப்பன்தாங்கல், வளசரவாக்கம், பூவிருந்தவல்லி, நெற்குன்றம், கோயம்பேடு பகுதிகளில் உள்ளவர்கள் இது தொடர்பான புகாருக்கு பாபா (98 41 58 88 52) என்பவரை தொடர்பு கொள்ளலாம். போரூர், ராமாபுரம், நெற்குன்றம், மணப்பாக்கம், முகலிவாக்கம், பெரம்பூர் பகுதிகளுக்கு சக்தி (90 94 32 13 93) என்பவரை தொடர்பு கொள்ளலாம். அண்ணா நகர் முதல் பட்டாபிராம் வரை உள்ளவர்கள் இது தொடர்பான புகாருக்கு கணேசன் (74 48 92 72 27) என்பவரை தொடர்பு கொள்ளலாம். குரோம்பேட்டை பகுதியில் உள்ளவர்கள் இது தொடர்பான புகாருக்கு, ஜெய்சன் (80 56 20 48 21) என்பவரை தொடர்பு கொள்ளலாம். குரோம்பேட்டை முதல் தாம்பரம் வரை உள்ளவர்கள் இது தொடர்பான புகாருக்கு ராபின் (88 07 87 06 10)என்பவரை தொடர்பு கொள்ளலாம். போரூர் ஆலப்பாக்கம் பகுதியில் உள்ளவர்கள் இது தொடர்பான புகாருக்கு, மணிகண்டன் (98 40 34 66 31) என்பவரை தொடர்பு கொள்ளலாம். குரோம்பேட்டை பகுதியில் உள்ளவர்கள் இது தொடர்பான புகாருக்கு, ரவி (96001190810) என்பவரை தொடர்பு கொள்ளலாம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)