Skip to main content

வென்டிலேட்டர் செயல்படாத மதுரை அரசு மருத்துவமனை... அவரச பிரிவில் 5 பேர் உயிரிழப்பு

Published on 08/05/2019 | Edited on 08/05/2019

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த மூன்று நோயாளிகள் உயிரிழந்த சம்பவத்தில் மேலும் இருவர் உயிரிழந்து, உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

 

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நேற்று திடீரென ஏற்பட்ட மின் தடையால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 நோயாளிகள் வென்டிலேட்டர் வசதி இல்லாமல் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாக  இன்று காலை செய்திகள் வெளியானது.

 

 

madurai

 

மின்சப்ளை இல்லாததால் இந்த சோகம் நிகழ்ந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு மருத்துவமனை அதிகாரிகள் அலட்சிய போக்கே காரணம் என நோயாளிகள், உறவினர்கள் என குற்றம்சாட்டி வருகின்றனர்.

 

 

மதுரையில் அண்ணா பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் விபத்துக்கான அவசர சிகிச்சை பிரிவு உள்ளது. இங்கு வென்டிலேட்டர் வசதியுடன் 15 படுக்கை வசதிகள் உள்ளது. நேற்று மாலை 6 மணிக்கு மதுரையில் திடீரென சுற்றுப்புற பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசியது. திடீரென இடி மின்னலுடன் மழை பெய்தது. இந்த சூறைக்காற்றால் மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்ததால் நேற்று மாலையே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 

 

 

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மருத்துவமனைக்கு வரக்கூடிய மின்சார இணைப்பில்  மின்தடை ஏற்பட்டதால் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள வென்டிலேட்டர் செயல்படவில்லை. இதனால் சிகிச்சையில் இருந்த 15 நோயாளிகளுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

 

 

இந்த சம்பவத்தில் மதுரை மாவட்டம் மேலூர் பூந்தொட்டி கிராமத்தைச் சேர்ந்த மல்லிகா, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் சேர்ந்த பழனியம்மாள், விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் ஆகிய மூன்று பேர் அடுத்தடுத்த ஐந்து நிமிடங்களில் மூச்சுத்திணறலால் பலியாகிய  நிலையில் தற்போது மேலும் இருவர் உயிரிழந்து பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

 

இந்த தொடர் உயிரிழப்பு சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சிறுவன் கடத்தல் சம்பவம்; ஐ.ஏ.எஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி தற்கொலை

Published on 21/07/2024 | Edited on 21/07/2024
Kidnapping incident; Ex-wife of IAS

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் ஐஏஎஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரை மாவட்டம் எஸ்.எஸ் காலனி, விவேகானந்தர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மைதிலி ராஜேந்திரன். இவருடைய 14 வயது மகன் மர்ம கும்பலால் கடத்தப்பட்டார். கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் இரண்டு கோடி ரூபாய் கொடுத்தால் தான் சிறுவனை விடுவோம். இல்லையெனில் கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விட்டனர்.

உடனடியாக இது குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. எஸ்.எஸ் காலனி காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையின் அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்பட்ட காவலர் செந்தில்குமார், ரவுடி அப்துல் காதர், காளிராஜ், வீரமணி ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இந்த கடத்தல் நடைபெற்றது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவத்தை நிகழ்த்திய முக்கிய நபர்களான ஹைகோர்ட் மகாராஜன் மற்றும் சூர்யா என்ற ஐஏஎஸ் அதிகாரியின் முன்னாள் மனைவியையும் போலீசார் தேடி வந்தனர்.

இருவரும் போலீஸ் பிடியில் சிக்காமல் இருக்க தப்பி பெங்களூரில் பதுங்கி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெங்களூரில் இருந்து குஜராத் சென்ற நிலையில் சூர்யா குஜராத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவர்களுடைய பெற்றோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சூர்யாவின் மரணம் குறித்து விசாரிக்கத் தனிப்படை போலீசார் தற்போது குஜராத்துக்கு விரைந்துள்ளனர். சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் ஐஏஎஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

Next Story

மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை!

Published on 16/07/2024 | Edited on 16/07/2024
Madurai Dt ntk executive Balasubramani incident

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 11 பேர் சரணடைந்த நிலையில் 11 பேரும் கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடி காவலில் விசாரணைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இத்தகைய பரபரப்பான சூழலில் தான் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் போலீசார் பிடியில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்தப் போது நேற்று (14.07.2024) அதிகாலையில் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். இதற்கிடையே இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சியினர் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். அதோடு தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து கேள்விகளையும் எதிர்க்கட்சியினர் எழுப்பினர்.

இத்தகைய சூழலில் மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவர் நாம் தமிழர் கட்சியில் மதுரை மாவட்ட வடக்கு தொகுதி துணைச் செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில் இவர் வழக்கம் போல் இன்று அதிகாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பாலசுப்பிரமணியம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீட்டின் அருகே நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.