Skip to main content

யாரும் பசியோடு உறங்கக் கூடாது... சாமானியர்களின் நெருக்கடியை சமாளித்த டிஎஸ்பி..!!!

Published on 23/04/2020 | Edited on 23/04/2020

"கல்வி, அதிகாரம், ஆளுமை இருந்தால் மட்டும் போதாது.! மனிதநேயம் இருந்தால் மட்டுமே அவன் முழு மனிதனாக முடியும்," என்பதற்கிணங்க கரோனா ஊரடங்குக் காலத்தில் தன்னுடைய காவல்துறை துணைச்சரகத்திற்குட்பட்ட எளியோர்களை தேடி சென்று வலிய உதவி வருகின்றார் டிஎஸ்பி ஒருவர்.

 

 No one should sleep hungry ... DSP dealt with the crisis of luggage .. !!!


சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வடக்கு மற்றும் தெற்கு, அழகப்பாபுரம், சோமநாதபுரம், குன்றக்குடி, பள்ளத்தூர், செட்டிநாடு மற்றும் சாக்கோட்டை காவல் நிலையங்களையும், மகளிர் காவல்நிலையம் மற்றும் போக்குவரத்துக் காவல் நிலையத்தினையும் உள்ளடக்கிய காரைக்குடி துணைச்சரகக் காவல்துறையின் டிஎஸ்பியாகப் பணியாற்றி வருபவர் அருண். 2016ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த இவர், அடிப்படையில் கால்நடை மருத்துவர். துவக்கத்தில் கோயம்புத்தூர் புறநகர் பகுதியில் பணியாற்றியிருக்க, 2019ம் ஆண்டு காரைக்குடி காவல்துறை துணைச்சரக டிஎஸ்பி-யாக மாற்றலானார். பதவியேற்றக் காலம் தொட்டு, தன்னை சந்திக்க வரும் புகார்தாரர்களுக்கே சிறுசிறு உதவிகளை செய்தவர் தற்போது கரோனா ஊரடங்கு காலத்தில் மனித நேயத்தில் மிளிர்கின்றார்.
 

nakkheeran app

 

 No one should sleep hungry ... DSP dealt with the crisis of luggage .. !!!


 

கரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், சாலையோரம் வசித்தவர்கள், சாப்பாட்டிற்கு மிகுந்த சிரமத்திற்குள்ளான நிலையில் உள்ளவர்களை கண்டறிந்து அம்மா உணவகத்துடன் தொடர்பு ஏற்படுத்தி பசியாற்றும் சேவையை துவக்கியது காரைக்குடி காவல்துறை துணைச்சரகம், அதேவேளையில், கட்டிடத் தொழிலாளர்கள், முடி திருத்துவோர்கள், சலவைத் தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்கள், செருப்பு தைப்பவர்கள், பிளாஸ்டிக் பொறுக்குபவர்கள், தினக்கூலிகள், மாற்றுத் திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்டோர், முதியோர்கள் மற்றும் திருநங்கைகள் என தனது காவல்துறை துணைச்சரகத்திலுள்ள எளியோரைக் கண்டறிந்து, காரைக்குடி வருவாய் துறையினருடன் இணைந்து அவர்களுக்கு அரிசி, மளிகை தொகுப்புகள் மற்றும் காய்கறிகளை டன் கணக்கில் வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

 No one should sleep hungry ... DSP dealt with the crisis of luggage .. !!!

 

இது இப்படியிருக்க, "நாங்கள் இங்குள்ள அழகப்பா பொறியியல் கல்லூரியில் படித்து வருகின்றோம். ஊரடங்கிற்கு பின் ஊர் செல்ல இயலாத நிலை." என டுவிட்டரில் மணிப்பூர், அருணாச்சலபிரதேசம் மாணவர்கள் பதிவிட அவர்களை தேடிசென்று ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப்பொருட்களை வழங்கியுள்ளார். அதுபோல் வெளி மாநிலத்திலிருந்து தொழிலுக்காக இடப்பெயர்ச்சியாகி காரைக்குடி வந்த வெளி மாநிலத்தார்கள் 300 நபர்களுக்கு தேவையான உருளைக்கிழங்கு, கோதுமை மாவு, எண்ணெய், தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட உணவுப் பொருட்களை மூட்டை கணக்கில் வழங்கி பசியாற்றியது.. மனிதநேயம் ஒருபுறம் இருந்தாலும், சட்டம் ஒழுங்கிலும் மிகுந்த கவனத்தை செலுத்தி இதுவரை 506 இருசக்கர வாகனங்களை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்த காரைக்குடி துணைச்சரக காவல்துறை, கரோனா குறித்த பல விழிப்புணர்வுகளை அளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சட்டவிரோத கருக்கலைப்பு; ஓய்வு பெற்ற பெண் செவிலியர் கைது

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
illegal abortion; Retired female nurse arrested

கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்பதை சட்டவிரோதமான முறையில் தெரிவிப்பவர்கள் அவ்வப்போது கைது செய்யப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிவகங்கையில் ஓய்வு பெற்ற செவிலியர் ஒருவர் கருவில் உள்ளது ஆணா பெண்ணா என்பதை சட்டவிரோதமான முறையில் தெரிவித்து வந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் பலையனூர் பகுதியைச் சேர்ந்தவர் காந்திமதி. இவர் ஓய்வு பெற்ற அரசு செவிலியர் ஆவார். கடத்த ஐந்து ஆண்டுகளாக கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்பதை சட்டவிரோதமான முறையில் பலருக்கு தெரிவித்து வந்த காந்திமதி, இதற்காக 20,000 பெற்றுக் கொண்டு கடந்த 5 வருடங்களாக கருக்கலைப்பிலும் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. இது குறித்து கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் மருத்துவத்துறை அதிகாரிகள் காவலர்களுடன் அங்கு சென்ற நிலையில், நடத்தப்பட்ட ஆய்வில் இந்த உண்மைகள் வெளியே வந்தது. அதனைத் தொடர்ந்து கையும் களவுமாக ஓய்வுபெற்ற செவிலியர் காந்திமதியை போலீசார் கைது செய்தனர்.

Next Story

கோர விபத்து; தந்தை, மகன் உயிரிழப்பு

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
claim accident; Son, father lose their live

சிவகங்கை மாவட்டம் கீரனூர் அருகே வாகனங்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரையை சேர்ந்தவர் இக்னீசியஸ். இவர் தன்னுடைய 13 வயது மகள் ஜோனாத்தன் உடன் தேவகோட்டையில் இருந்து ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது சிவகங்கை மாவட்டம் கீரனூர் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் மீது இவர்கள் பயணித்த கார் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு காரும் பலத்த சேதமடைந்தது. உடனே அக்கம்பக்கத்தில் இருந்த மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் காரில் இருந்தவர்களை மீட்டனர்.

இதில் சம்பவ இடத்திலேயே தந்தை இக்னீசியஸ், மகன் ஜோனாத்தன் ஆகியோர் உயிரிழந்தனர். மற்றொரு காரில் வந்த ஆறு பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.