அரசுப் பேருந்துகளில் பார்வையற்றவர்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பயணக் கட்டணத்தில் 75 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டுள்ள நடத்துனர் இல்லாத பேருந்தில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிக்கு கட்டணச் சலுகை கொடுக்க முடியாது என்றும் சலுகை வேண்டுமானால் இறங்கி வேறு பேருந்தில் வரச்சொல்லி உள்ளார் போக்குவரத்துறை ஊழியர்.
இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை பார்வையற்றோர் பள்ளியின் ஆசிரியர் சரவணமணிகண்டன் கூறும் போது..
ஒரு வேலையாக திருச்சிக்கு செல்ல, நடத்துனர் இல்லா பேருந்தில் ஏறினேன். அப்போது, பேருந்தில் டிக்கெட் எடுக்கும் போது 75 சதவீதம் பயணக்கட்டண சலுகை கொடுக்க முடியாது என்று சொன்னதுடன் சலுகை வேண்டுமானால் வேறு பேருந்தில் செல்லுங்கள் என போக்குவரத்துறை ஊழியர் கூறினார்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அதனால் அரசின் பயணக் கட்டண சலுகை இருந்தும், முழு தொகை கொடுத்து பயணித்தோம். இந்த புதிய பேருந்துகளில் பயணக் கட்டண சலுகை உண்டா? இல்லையா? என்பதை போக்குவரத்து அதிகாரிகள் விளக்க வேண்டும் என்றார்.
அரசுப் பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை கட்டணம் மறுக்கப்படுவது அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. ஆகவே கட்டண சலுகை பற்றி அரசும் அதிகாரிகளும் விளக்க வேண்டும்.