Skip to main content

மது வாங்க ஆதார் தேவையில்லை... கட்டுப்பாடுகளை தளர்த்திய உச்சநீதிமன்றம்!

Published on 15/05/2020 | Edited on 15/05/2020
TASMAC

 

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. ஆனால் கடந்த 7ஆம் தேதி தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறந்தது. இதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது, அந்த வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் டாஸ்மாக் கடைகள் கடந்த 8-ம் தேதியே மூடப்பட்டது.


அதனை அடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பாக மேல்முறையீடு செய்திருந்தது. அந்த வழக்கில் தற்போது உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு, உச்சநீதிமன்றம் இரண்டு மாதங்களுக்கு இடைக்கால தடை விதித்திருக்கிறது. இதனால் நாளை மீண்டும் டாஸ்மாக் கடை திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

உச்சநீதிமன்றம் அளித்திருந்த இந்த இடைக்கால தடை உத்தரவில், உயர்நீதிமன்றம் ஏற்கனவே டாஸ்மாக் கடைகளை திறக்க விதித்திருந்த பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தியிருக்கிறது. குறிப்பாக ஆதார் அட்டைகளை கொண்டுவர வேண்டும் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை உச்சநீதிமன்றம் தளர்த்தியிருக்கிறது.

 

 


உயர்நீதி மன்றத்தின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்துள்ளதால் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான முழுக் கட்டுப்பாட்டையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவித்திருக்கிறது. இதனால் மது வாங்குவோர் ஆதார் கொண்டுவர வேண்டும் போன்ற உயர்நீதிமன்றம் கொடுத்திருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகிறது.

அதேபோல், டோக்கன் தரும் இடம் தனியாக அமைய வேண்டும். மது வினியோக கவுண்டர்களை அதிகரிக்க வேண்டும். மது வாங்க வருவோர் வாகனங்கள் நிறுத்துவதற்கு உரிய இட வசதி செய்து தரவேண்டும். 550 பேர் வரிசையில் இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு டோக்கன் கொடுத்து மறுநாள் மது வழங்கப்படும். சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் எந்த சமரசமும் காட்ட வேண்டாம் என உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

3 நாள்கள் விடுமுறை; மதுக்கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Drinkers gathered in bars for holiday due to election

மக்களவைத் தேர்தலையொட்டி 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டதையொட்டி செவ்வாய்க்கிழமை (16-04-24) இரவு மதுக்கடையில் மதுப்பிரியர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் ஏப்ரல் 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் அரசு (டாஸ்மாக்) மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக் கடையுடன் இணைந்து செயல்படும் மதுக்கூடங்கள், ஏப்ரல் 2 முதல் எப்ரல் 11 வரை (ஏப்ரல் 6 நீங்கலாக) அனைத்து மதுக்கூடங்களும் மூடப்படும். இந்த 3 நாள்களில் மதுபானங்களை விற்பனை செய்தாலோ அல்லது வேறு இடங்களுக்கு மதுபாட்டில்களை கொண்டு சென்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (16-04-24) இரவுடன் மதுக்கடைகள் 3 நாள்களுக்கு மூடப்படும் என்பதால், திருச்சியில் மதுப்பிரியர்கள் தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். ஏராளமானோர் கடைகளை முற்றுகையிட்டு 3 நாள்களுக்குத் தேவையான மதுவகைகளை வாங்கிச்சென்றனர். இதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Next Story

மக்களவைத் தேர்தல்; மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Lok Sabha elections; Orders to close liquor shops!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

அதில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. 

இந்த நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி ஏப்ரல் 17,18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்த சுற்றறிக்கை, அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் மதுக்கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.