Skip to main content

ஹெல்மட் அணியாவிட்டால் இனி பெட்ரோல் இல்லை!!

Published on 28/11/2020 | Edited on 28/11/2020

 

No more petrol if you don't wear a helmet !!

 

ஹெல்மட் குறித்த பலவேறு விழிப்புணர்வுகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஹெல்மட் அணியாமல் சாலைகளில் பயணிப்போர் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இந்நிலையில், 'ஹெல்மட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை' என்ற வாசகத்தை பெட்ரோல் பங்குகளில் காட்சிப்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையில் உள்ள பெட்ரோல் பங்குகளில், 'ஹெல்மட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை' என்ற வாசகத்தைக் காட்சிப்படுத்த போக்குவரத்துக் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 'சீட் பெல்ட் இல்லை என்றால் பெட்ரோல், டீசல் இல்லை' எனவும் பதாகை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இந்த உத்தரவு சென்னைக்கும் மட்டும் பொருந்தும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல்...5 சுங்கச்சாவடிகளில் டுவிஸ்ட்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
From the first day of April; Twist at 5 toll booths

வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 5 சுங்கச்சாவடிகளில் குறைந்தபட்சம் 5 ரூபாயில் இருந்து 20 ரூபாய் வரை கட்டண உயர்வு இருக்கும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.மாதாந்திர கட்டணம் 100 ரூபாயில் இருந்து 400 ரூபாய் வரை உயர இருப்பதாகக் கூறப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லாடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தால், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Petrol, diesel price reduction

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நாளை (15.03.2024) காலை 06:00 மணி முதல் அமலுக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 663 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை மூலம் 58 லட்சத்திற்கும் அதிகமான கனரக சரக்கு வாகனங்கள், 6 கோடி கார்கள் மற்றும் 27 கோடி இருசக்கர வாகனங்கள் பயன்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தற்போது பெட்ரோல் லிட்டருக்கு 102 ரூபாய் 75 பைசாவிற்கும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 94 ரூபாய் 34 பைசாவுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை குறைப்பை அடுத்து சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் 75 பைசாவிற்கும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 92 ரூபாய் 34 பைசாவுக்கும் விற்பனை செய்யப்பட உள்ளன.

முன்னதாக உலக மகளிர் தினத்தை ஒட்டி சமையல் கேஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. பிரதமர் மோடி இதற்கான உத்தரவை பிறப்பித்திருந்தார். சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு என்பது பல கோடி குடும்பங்களின் நிதிச்சுமையை கணிசமாகக் குறைக்கும் என தெரிவித்துள்ள பிரதமர், சமையல் எரிவாயு மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம் குடும்பங்களின், குறிப்பாக பெண்களின் ஆரோக்கியம் உறுதி செய்யப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.