சொத்துகுவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 வருடம் சிறை தண்டனை விதித்து,கடந்த 2017 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா தற்போது அவரின் தண்டனை காலத்தைநிறைவு செய்துள்ளார்.
தற்போது கரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் குணமாக வேண்டி துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் சில தினங்களுக்கு முன்பு வாழ்த்து தெரிவித்திருந்தார். இது அரசியல் பதிவு அல்ல என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், "மனிதாபிமானஅடிப்படையில் சசிகலா நலம்பெற வேண்டி ஓபிஎஸ் மகன் கருத்து தெரிவித்துள்ளார். சசிகலாவை அதிமுகவில் சேர்க்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை" என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.