/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1-a-nlc-apontment-art.jpg)
சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலகத்தில்நெய்வேலி என்எல்சிஇந்தியாநிறுவனத்திற்குநிலம் கையகப்படுத்துவது தொடர்பாக கரிவெட்டி, கத்தாழை உள்ளிட்ட கிராமங்களில் உள்ள நில உரிமையாளர்கள், விவசாயிகள் மற்றும் விவசாயிகள்சங்க நிர்வாகிகள்கலந்துகொண்ட கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்திற்கு தமிழக வேளாண்மைமற்றும்உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.
இதில்கடலூர்மாவட்டஆட்சித்தலைவர்பாலசுப்பிரமணியம், என்எல்சிஇந்தியா நிறுவனத்தின் சுரங்கத்துறை இயக்குநர், சிதம்பரம்உதவிஆட்சியர் ஸ்வேதா சுமன், கடலூர் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன்உள்ளிட்ட என்எல்சிஅதிகாரிகள் மற்றும்அலுவலர்கள் தமிழ்நாடு அரசின்வருவாய்த் துறையினர்கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில்,என்எல்சிநிர்வாகத்திற்குநிலம்கொடுத்தவகையில் தமிழ்நாடுஅரசால்உயர்த்தப்பட்ட இழப்பீடான ஏக்கருக்கு25லட்சரூபாய் வழங்கியதுதிருப்திஅளிப்பதாகவும்,என்எல்சியில் உள்ள சொசைட்டி மூலமாக வேலைவாய்ப்புகள்வழங்கவேண்டும்எனவும்விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு வேளாண்துறை அமைச்சர்தகுதிஉடையநபர்களுக்கு பணி வழங்கப்படும்என உறுதி அளித்தார்.அதனடிப்படையில் கரிவெட்டி,கத்தாழைகிராமத்தில் என்எல்சிக்குநிலம்கொடுத்த நில உரிமையாளர்கள் சுமார்10நபர்களுக்கு என்எல்சி சொசைட்டியில்பணிநியமன ஆணையை வேளாண்துறைஅமைச்சர் வழங்கினார். இதற்கு விவசாயிகள் வரவேற்று அரசின்இழப்பீட்டு தொகை மற்றும்வேலைவாய்ப்புக்கான பணி ஆணைவழங்கியதுமகிழ்ச்சிஅளிக்கிறதுஎன அமைச்சரிடம் கூறினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “என்எல்சிக்கு நிலம் கொடுத்த விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை என்எல்சி நிர்வாகம் தீர்த்து வைத்துள்ளது. தற்போது ஏக்கருக்கு ரூ. 25 லட்சம் மற்றும் தகுதியுடைய விவசாயிகளின் குடும்பத்திற்கு ஒருவருக்கு வேலை வழங்குவதாக ஒப்புக்கொண்டனர். மேலும், விவசாயிகள் பெரும்பாலும் என்எல்சி சொசைட்டி மூலம் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அதனடிப்படையில் தற்போது கரிவெட்டி, கத்தாழை கிராமத்தில் உள்ள 10 விவசாயிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், நிலம் கொடுக்க உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இந்த நிவாரணம் வழங்கப்படும்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)