ரபக

Advertisment

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக மாறி வலுப்பெற்றுள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி இன்று மதியம் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புயல் எதிர்பார்த்த வேகத்தில் பயணிக்காத காரணத்தால் எங்கே கரையைக் கடக்கும் என்று உறுதியாகத் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் மதியம் முதலே காற்றுடன் மழை பெய்து வருகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் சென்னை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், காலை முதலே சென்னையில் சூறைக்காற்றுடன் சில இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நிவர் புயல் 11 கி.மீவேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருவதாகவும், புயல் கரையைக் கடக்கும் போது, 155 கி.மீவேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.