/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/SAFSAFS_0.jpg)
வங்கக் கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதிதீவிரப் புயலாக இருந்த நிவர், தற்போது தீவிரப் புயலாக மாறி கரையைக் கடந்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
புதுச்சேரி அருகே நேற்று இரவு 11 மணி முதல் 02.30 மணிவரை முழுவதுமாகக் கரையைக் கடந்த நிவர் புயல், தற்போது தீவிரப் புயலாக மாறியுள்ளது. இதனால் அடுத்த 6 மணிநேரத்திற்குக் கனமழை தொடரும். மேலும்,நிவர் வலுவிழந்ததால், படிப்படியாக மழைப் பொழிவு குறைந்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)