Skip to main content

ஈரோட்டில் மீண்டும் 9 பேர் வீட்டுக்கு...-விரட்டப்படும் கரோனா!

Published on 17/04/2020 | Edited on 17/04/2020

கொடிய நோயான கரோனா தமிழகத்திலிருந்து துரத்துப்படுகிறது என்கிற நம்பிக்கை விதையாக நாளுக்கு நாள் இதன் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை குறைவதோடு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு இனி மரணம்தான் என நம்பிக்கை இழந்த நோயாளிகள் பூரண குணம் பெற்று, வீட்டுக்கு செல்லும் எண்ணிக்கையைும் அதிகரித்து வருகிறது..

   Nine people back home in Erode


இந்த வைரஸ் தொற்று தொடங்கி விட்டது என தமிழகத்தில் தெரிந்த போதே அபாய நகரமாக அறிவிக்கப்பட்டது ஈரோடு. தொடர்ந்து அந்த நிலையில் தான் இருந்தது. சுமார் 70 பேர் வரை இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார்கள். அவர்கள் மூலம் தொடர்புடையவர்கள் என கணக்கிட்டு ஏறக்குறைய ஒரு லட்சத்தி இருபது ஆயிரம் பேர் அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனர். அந்த அளவுக்கு இந்த வைரஸ் தொற்றின் தீவிரம் இங்கு இருந்தது.
 

nakkheeran app


இந்த நிலையில் மாவட்ட அளவிலான அதிகாரிகள், ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என எல்லோருமே தொடர்ந்து ஈரோடு மாவட்டதில் இந்த வைரஸ் தொற்று இல்லாமல் செய்ய வேண்டுமென அர்ப்பணிப்போடு பாடுபட்டார்கள். அனைத்து துறை ஊழியர்களும், அவர்களின் பங்களிப்பும் அளப்பரியது. அதனால்தான் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்ட ஈரோடு மாவட்டத்தில் இறப்பு என்பது ஒரே ஒரு நபருக்குதான் ஏற்பட்டது. அதன் பிறகு சிகிச்சை முடித்து, தொடர்ந்து அவர்களுக்கு இத்தொற்று இல்லை என்று ஆய்வறிக்கை வந்தபிறகு, மேலும் அவர்களை 14 நாட்கள் வைத்து இரண்டாவது முறையும் இத்தொற்று உள்ளதா என பரிசோதனை செய்து அதிலேயும் இல்லை என்று வந்த பிறகு அப்படிப்பட்டவர்களை வீட்டுக்கு அனுப்பும் நிகழ்வு தொடர்ந்து நடந்து வருகிறது.

 

 Nine people back home in Erode


ஏற்கனவே ரயில்வே காலனி மருத்துவமனையில் பணிபுரிந்த ஒரு மருத்துவர் உட்பட 4 பேரும் இதிலிருந்து விடுபட்டு அவர்கள் வீட்டுக்கு சென்றனர். அதேபோல் திருச்சியில் இருந்து வந்த ஒரு நபர் இதிலிருந்து விடுபட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அதன்பிறகு சென்ற இரண்டு நாட்களுக்கு முன்பு 13 பேர் குணமாகி, அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக இன்று மாலை, 9 பேர் இந்த வைரஸ் தொற்று இல்லை என்று உறுதியான பிறகு அவர்களும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் 68 பேர் இதில் பாதிப்பு உள்ளவர்கள் 44 பேர். இந்த 44 பேரும் நல்ல நிலையில், உடல் ஆரோக்கியமாக இருப்பதாக மாவட்ட சுகாதாரப் பணிகள் இயக்குனர் சவுண்டம்மாள் நம்மிடம் கூறினார்கள். இந்த ஒன்பது பேரும் வீட்டுக்கு அனுப்பும் நிகழ்வு இன்று நடைபெற்றது. அப்போது மாவட்ட ஆட்சியர் கதிரவன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் ஐ.பி.எஸ், பொது சுகாதாரத் துறை துணை இயக்குனர் சவுண்டம்மாள் ஆகியோர் கலந்துகொண்டு வீட்டுக்குச் செல்லும் அந்த ஒன்பது பேருக்கும் வாழ்த்துக் கூறியதோடு, இந்த நோயில் இருந்து நீங்கள் விடுபட்டு விட்டீர்கள் இதுபோல மற்ற யாருக்கும் வரக்கூடாது என்பதால் மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், எனக் கூறி அனுப்பி வைத்தனர். 

தீராத துன்பமாக இந்த வைரஸ் தொற்று மனித குலத்திற்கு மிகப் பெரிய நெருக்கடியை கொடுத்து வரும் நிலையில், இதையும் மனித ஆற்றல் எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை இச்சிகிச்சையில் இருந்து மீண்டவர்கள் முகத்தில் தெரிகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஈரோடு அதிமுக வேட்பாளரை கைது செய்ய வேண்டும்” - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
AIADMK candidate should be arrested says EVKS Elangovan

ஈரோடு தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரை கைது செய்ய வேண்டும்,தேர்தல் தகுதி இழக்க செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், “ ஆற்றல் அசோக்குமார் ஈரோட்டில் ஒரு கிடங்கில் வாக்காளர்களுக்கு தர ஏராளமான புடவைகள் பதுக்கி வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் 200க்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்குகள் வைத்துள்ளார். அவருடைய சொத்து விபரங்களை இதர விஷயங்களையும் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ விசாரிக்கை வேண்டும். அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். கைது செய்யப்பட வேண்டும்.

தேர்தல் விதிகளின்படி தேர்தல் அறிவித்த பிறகு எந்த புதிய அறிவிப்பையும் அரசு வெளியிடக் கூடாது. ஆனால், அதை மீறி மோதி அரசு 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி உள்ளது. தேர்தல் ஆணையம் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் ஆணையம் பாஜக அரசின் பிடியில் உள்ளது. தமிழக பாஜக தலைவர்  கோவையில் இரண்டு விதமாக மனு தாக்கல் செய்துள்ளார். அனைத்து கட்சிகளும் இந்த குறைபாட்டை சுட்டிக்காட்டி உள்ளன. இருந்தாலும் தேர்தல் ஆணையத்திலிருந்து ஒரு தொலைபேசி வருகிறது. அதனைத் தொடர்ந்து அவர் வேட்புமனு ஏற்கப்படுகிறது.

தேர்தல் ஆணையம் அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி ஏதேதோ பேசுகிறார். அவர் பேசுவது புரியவில்லை. தமிழகத்தில் கஞ்சா கலாச்சாரம் பரவிவிட்டதாக கூறுகிறார். எம்ஜிஆர் காலத்திலிருந்து கஞ்சா கலாச்சாரம் உள்ளது. கஞ்சா போதை வஸ்துக்கள் குஜராத்தில் அதானி துறைமுகம் மூலம் வருகிறது. பாஜக அரசு இளைஞர்கள் அனைவரும் இந்தியாவில் போதை கலாச்சாரத்துக்கு உட்பட இதை அனுமதிக்கிறது. குஜராத்தில் மதுவிலக்கு பேயரளவில் உள்ளது. பர்மிட் இருந்தால் மது வாங்கி குடிக்கலாம். முதலில் அங்கு மதுவிலக்கை கொண்டு வரட்டும். பின்னர் தமிழகத்தில் மதுவிலக்கே வலியுறுத்தலாம்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்தலில் போட்டியிட பணமில்லை என்கிறார். அவரிடம் ஏராளமான பணம் படுக்கையறையிலும் பைகளிலும் உள்ளது. அவரது கணவர் தேர்தல் பத்திர முறைகேடு உலகில் மிகப்பெரிய ஊழல் என்கிறார். கேட்டால் நிர்மலா சீதாராம் இது அவரது கருத்து என்கிறார். இதற்கு என்ன விளக்கம் அவர் அளிப்பார். சுப்பிரமணியசுவாமி அனுபவ வாய்ந்தவர் அவர் மோதி மீண்டும் பிரதமராக வரக்கூடாது என்கிறார். ஜெர்மனி அமெரிக்கா போன்ற நாடுகள் மோதி தலைமையில் சர்வாதிகாரத்தை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது என்கின்றனர். 

அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமித்ஷா கூட்டணி நாட்டில் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம். சிறையில் அடைக்கலாம் என்று செயல்படுகிறது. இதை தடுத்து நிறுத்த ஜனநாயகத்தை காப்பாற்ற இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். எனது உடல்நிலை காரணமாக தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் செய்ய வாய்ப்பு இல்லை. ஆனால் ஈரோட்டில் திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து பிரச்சாரம் செய்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

'இன்னைக்கு ஒரு புடி' தாத்தா மருத்துவமனையில் அனுமதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமான தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

'வில்லேஜ் குக்கிங் சேனல்' என்ற யூடியூப் சேனல் சமையலுக்கு மிகவும் பிரபலமானது. ஒரு குழுவாகச் சேர்ந்து உணவை சுவாரசியமாக சமைத்து சாப்பிடும் இந்த யூடியூப் சேனல் இந்திய அளவில் அதிக சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட சேனல்களில் ஒன்றாகும்.

அண்மையில் ராகுல்காந்தி உள்ளிட்ட பலர் இந்த சேனலில் உணவு சமைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலப்படுத்தி இருந்தனர். இந்த யூடியூப் சேனலில் அனைவரும் இளைஞர்கள் என்ற நிலையில், மிகவும் குறிப்பிடத்தகுந்த முதியவர் பெரியதம்பி தாத்தா. 'இன்னைக்கு ஒரு புடி' என்ற வசனம் மற்றும் உடல் மொழியால் பலர் மனதில் இடம் பிடித்தவர்.

இந்நிலையில், முதியவர் பெரியதம்பி தாத்தா தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படங்கள் ஒன்று இணையத்தில் வெளியாகி இருந்தது. சேனலை நடத்தும் சுப்பிரமணியன் வேலுசாமி இது குறித்து வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் 'தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி' எனத் தெரிவித்துள்ளார்.