Skip to main content

காத்திருந்தும் வராத காதலன்... வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட மணப்பெண்!!

Published on 01/11/2020 | Edited on 01/11/2020
nilgiri love marriage incident

 

நீலகிரி மாவட்டம் திருமண மேடையிலேயே மணப்பெண் 'என்னை அழைத்துச் செல்ல என் காதலர் வருவார்' என திருமணத்தை நிறுத்திய வீடியோ காட்சி வைரலாகி இருந்தது. நீலகிரி மாவட்டம் மட்ட கண்டியைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்கும் துனேரியை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது.

வடுகர் இனத்தில் திருமணம் நடப்பதற்கு முன்பு மணமேடையில் மணமகளிடம் மூன்று முறை திருமணத்தில் விருப்பம் உள்ளதா எனக் கேட்ட பிறகு தாலி கட்ட வேண்டும் என்ற முறை உள்ளதால் அதன் படி மூன்று முறை பிரியதர்ஷினியிடம் சம்மதம் கேட்க மௌனமாக இருந்த மணப்பெண் பிரியதர்ஷினி தன்னை அழைத்து செல்ல பார்த்திபன் என்ற தனது காதலர் இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்துவிடுவார் என கூறியவரே தாலி கட்ட வந்த ஆனந்தின் கைகளை தடுத்தார்.

அப்போது அங்கே இருந்த மணப்பெண்ணின் உறவினர்கள் மணப்பெண்ணை தாக்க முற்பட்டனர். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி இருந்தது. அன்று மாலைவரை மணப்பெண் காத்திருந்தும் அவர் கூறிய காதலன் வராததால் மணப்பெண் வீட்டார் மணமகளை வீட்டில் இருந்து வெளியே அனுப்பியதாக கூறப்படுகிறது. நாள் முழுவதும் காத்திருந்தும் காதலன் வராததால் அவரைக் காண்பதற்காக மணப்பெண் பிரியதர்ஷினி சென்னைக்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ராகுல் காந்தி பயணித்த ஹெலிகாப்டரில் சோதனை!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Rahul Gandhi's helicopter was tested

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள், அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி இன்று (15.04.2024) நீலகிரி மாவட்டம் பந்தலூர் வந்தடைந்தார். அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் சோதனை மேற்கொண்டனர். ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து தேவாலயம் செல்லும் ராகுல் காந்தி அங்குள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார். கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு செல்லும் வழியில் பந்தலூர் பகுதிக்கு ராகுல் காந்தி வருகை புரிந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நீலகிரியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதற்காக ஹெலிகாப்டர் மூலமாக உதயநிதி ஸ்டாலின் நேற்று (14.04.2024) நீலகிரி வந்திருந்தார். அப்போது அவர் வந்த ஹெலிகாப்டரையும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

உதயநிதி சென்ற ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
Udayanidhi's helicopter flying force test

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள், அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நீலகிரியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆர.ராசாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக ஹெலிகாப்டர் மூலமாக உதயநிதி ஸ்டாலின் நீலகிரி வந்திருந்தார். இந்நிலையில் அவர் வந்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர்.