தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ அவ்வப்போது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்துவது வழக்கம். கோவை உள்ளிட்ட இடங்களில் அண்மையில் சோதனை நடத்தி இருந்தது. இந்நிலையில் இன்று திருச்சி மத்தியச் சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். முகாமில் உள்ள சந்தேகத்திற்கிடமானசிலரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் தங்கி உள்ள நிலையில் அந்த சிறப்பு முகாமில் விசாரணை நடக்கிறது என்பது குறிப்பிடத்தகுந்தது.
திருச்சி அகதிகள் முகாமில் என்.ஐ.ஏ விசாரணை!
Advertisment