New Call Center for Commercial Tax Development

Advertisment

வணிகவரித்துறை மேலாண்மைக்காக புதிய அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வணிகவரித்துறையிலும் பதிவுத்துறையிலும் தனிக்கவனம் செலுத்தி அதன் வருவாயை உயர்த்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். வணிகவரித்துறையில் புதிதாக அழைப்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பு மையம் 1.84 கோடி ரூபாயில் ஏறத்தாழ 40 பேர் அமர்ந்து பணிகளில் ஈடுபடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் நமூனா படிவம் செலுத்தக்கூடியவர்கள் தவறினாலும் அவர்களுக்கு ஞாபகப்படுத்தும் விதமாக இந்த அழைப்பு மையத்தை உருவாக்கியுள்ளோம்” எனக் கூறினார்.